வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நடிகைகளை மிரட்டி பணம் பறிக்கும் பயில்வான்.. போலீசில் புகார் அளித்த பிரபலம்

சோசியல் மீடியா பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் தற்போது இருந்த இடத்திலேயே நாம் எல்லா செய்திகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் பல பிரபலங்கள் யூடியூபில் சொந்தமாக சேனல்களை உருவாக்கி பல வீடியோக்களை பகிர்ந்து மக்களிடையே அதிக பிரபலமாகி வருகின்றனர்.

இப்படி யூடியூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் பயில்வான் ரங்கநாதன். திரைப்படங்களில் காமெடி, வில்லன் போன்ற கேரக்டர்களில் நடித்து வந்த இவர் ஒரு பத்திரிகையாளராகவும் இருக்கிறார். அதன் அடிப்படையில் இவர் திரைமறைவில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் கூறி வருகிறார்.

அதிலும் நடிகைகளைப் பற்றி இவர் கூறும் பல விஷயங்கள் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அவர் இப்படி நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி மிகவும் கொச்சையாக பேசி வருவதை கேட்பதற்கு என்றே சில ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் அவர் சினேகா, கீர்த்தி சுரேஷ், ராதிகா போன்ற பல நடிகைகளைப் பற்றியும் பேசி வருகிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் கே ராஜன், பயில்வான் ரங்கநாதன் பற்றி காவல் துறையில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் பயில்வானை பற்றிய பல விஷயங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். அதில் தற்போது திரையுலகில் மிக பிரபலமாக இருக்கும் நடிகைகளை பற்றி பயில்வான் அவதூறான வார்த்தைகளை பேசுவது கண்டிக்கத்தக்கது.

இப்படி பொய்யான விஷயங்களைப் பேசி அதன் மூலம் அவர் பிரபலம் அடைய நினைக்கிறார். மேலும் நடிகைகளை பற்றி பேசி அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறிக்கிறார் என்றும் ராஜன் தெரிவித்துள்ளார். அவரை எதிர்த்து யாராவது பேசினால் உடனே அவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுக்கிறார்.

அதனால் அவர் பற்றி புகார் அளிக்க எந்த பிரபலங்களும் முன்வருவதில்லை. தற்போது மகளிர் அமைப்பைச் சேர்ந்த சிலர் அவருக்கு எதிராக புகார் கொடுத்திருக்கின்றனர். அதைப்போல் நானும் அவருடைய இந்த அவதூறு பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று காவல் துறையில் புகார் அளித்து இருக்கிறேன் என்று பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த கருத்துக்கு ரசிகர்கள் சில எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் சில நாட்களுக்கு முன்புதான் பயில்வான் ராஜனை பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் விஜய், அஜித் போன்றவர்களை பற்றி அவதூறாக பேசுவது குறித்து கண்டித்துப் பேசி இருந்தார். அந்த கடுப்பில் தான் இப்போது ராஜன், பயில்வான் மீது புகார் அளித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Trending News