திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சிம்புவுக்காக மெனக்கெடும் கௌதம் மேனன்.. தயாரிப்பாளர் வெளியிட்ட அடுத்த பட சீக்ரெட்

சிம்பு, கௌதம் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் ஏஜிஆர் கேரக்டரில் மிரட்டிய சிம்புவை ரசிகர்கள் கொண்டாட தவறவில்லை. அதை தொடர்ந்து அவர் இப்போது கமல் தயாரிப்பில் தேசங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இது குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை எதிர்பார்த்து வருகின்றனர். மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாக இருப்பதும் இந்த ஆர்வத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சிம்புவின் அடுத்த ப்ராஜெக்ட் பற்றிய தகவலை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: சின்னப் பையனுக்கு ஜோடியான 4 மூத்த நடிகைகள்.. பழைய காதலியை வெறுப்பேற்றிய சிம்பு

இவர்களின் கூட்டணியில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் 85 கோடி வரை வசூலித்து லாபம் பார்த்தது. மேலும் படத்தின் முடிவில் அடுத்த படத்திற்கான குறிப்பையும் இயக்குனர் கொடுத்திருந்தார். அதனாலேயே ரசிகர்கள் வெந்து தணிந்தது காடு 2 எப்போது வரும் என்று அடிக்கடி கேட்டு வந்தனர்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ஐசரி கணேஷ் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதற்கான வேலைகளில் தான் தற்போது கௌதம் மேனன் இருக்கிறாராம். முதல் பாகத்தில் முத்துவீரனாக இருக்கும் சிம்பு முத்து பாயாக மாறுவது போல் காட்டப்பட்டிருக்கும்.

Also read: இயக்குனரை ஏமாற்றிய சிம்புவின் குடும்பம்.. நடுரோட்டுக்கு வந்த டைரக்டர்

இதுவே அடுத்த பாகம் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி இருந்தது. அதன் காரணமாகவே கெளதம் மேனன் அந்த கேரக்டருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி கொண்டிருக்கிறாராம். அதனாலேயே ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகள் கொஞ்சம் தாமதமாகி கொண்டிருக்கிறது.

இந்த சீக்ரெட்டை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறியிருக்கிறார். அந்த வகையில் மீண்டும் முத்துபாயாக மாற இருக்கும் சிம்புவின் அடுத்த அதிரடியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த தகவல் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Also read: டி ராஜேந்தர் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகை.. சுயரூபம் தெரிந்து விரட்டி விட்ட மனுஷன்

Trending News