ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

விஜய் சேதுபதியால் தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்.. சிவகார்த்திகேயனை பார்த்து கத்துக்கோங்க

விஜய் சேதுபதி தற்போது தமிழ், ஹிந்தி, மலையாளம் என்று பல திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் இவர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கிறது.

மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பயங்கர வில்லனாக மிரட்டியிருக்கிறார். அதனால் இந்தப் படத்தில் அவருடைய வில்லத்தனத்தை காண்பதற்காக அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் விடுதலை திரைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அது தவிர முதல் முறையாக இவர் கார்த்தியுடன் இணைந்து ஒரு திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். இப்படி பல திரைப்படங்களிலும் இவர் நடித்து வந்தாலும் அந்த படங்கள் அனைத்தும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற தவறி வருகிறது.

அந்த வகையில் இவரின் நடிப்பில் கடைசியாக காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளியானது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் அந்த படத்தில் நாயகிகளாக நடித்து இருந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் பெறவில்லை.

படம் வெளிவந்து கிட்டத்தட்ட 32 நாட்கள் கழிந்த நிலையில் இந்த படம் சென்னையில் மட்டும் இதுவரை 5.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த படத்தை தயாரித்த ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

சமீபகாலமாக விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் கல்லா கட்டத் தவறி வருகிறது. அதனால் ரசிகர்கள் பலரும் இவர் திரைக்கதையில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று கூறி வருகின்றனர். மேலும் தற்போது கோலிவுட்டின் வசூல் நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயனை பார்த்து கத்துக்கோங்க என்று விஜய் சேதுபதிக்கு பலரும் அறிவுரை கூறி வருகின்றனர்.

Trending News