ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

எதிர்பார்த்த இரண்டு படங்களை அடுத்து அடுத்து ரிலீஸ் செய்யப் போகும் சுரேஷ்காமாட்சி.. மாநாட்டுக்கு பின் நிரம்பும் கல்லா

Producer Suresh Kamatchi announced the release of Vanagon and Yezhu Kadal Yezhu Malai: மிக மிக அவசரம் என்ற பெண் காவலரின் தியாகத்தை வெளிப்படுத்திய திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. அதன்பின் கடந்த 2021 நவம்பரில் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தை துணிந்து எடுத்ததாகவும் மாநாடு படத்தின் நூறாவது நாள் வெற்றி எதிர்பாராமல் கிடைத்தது என்றும் பூரித்து போனார் சுரேஷ் காமாட்சி.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக டைம் லுப் கதையை துணிச்சலாக எடுத்து வெற்றி பெற வைத்தார். அதிலும் சிம்புவை தாண்டிய நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு இப்படத்தில் மேஜிக் ஆனது எனவும் பாராட்டினார் சுரேஷ் காமாட்சி.

படம் சரியில்லை என்றால் நான்கே நாட்களில் படத்தை தூக்கி எறியும் இந்த சூழ்நிலையில் துணிந்து இறங்கி செய்த மாநாடு தன்னம்பிக்கையின் உச்சம் தொட்டு உள்ளது என்று பெருமை பட்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அடுத்ததாக பாலாவுடன் வணங்கான் படத்தையும் மற்றும் சூரி நடிக்கும் ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தையும் தயாரித்து உள்ளார்.

Also read: ரொம்ப பிஸின்னு ஆட்டிட்யூட் காட்டும் 5 ஹீரோக்கள்.. சர்வதேச திரைப்பட விழாவில் சூரி

தனது திரைக்கதையில் ஒரு துளியும் சமரசம் என்ற பேச்சுக்கு இடம் கொடாது தான் நினைத்ததை நினைத்த மாதிரியே உருவாக்கும் இயக்குனர் பாலாவின் கைவண்ணத்தில் மெருகேறி உள்ளது வணங்கான். கடந்த பல வருடங்களாக இடைவேளை எடுத்திருக்கும் பாலாவிற்கு இப்படம் ஒரு தரமான கம்பேக்காக அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

வணங்கான் படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக பேசப்பட்டு பல்வேறு  சந்தர்ப்ப சூழ்நிலையால் சூர்யா விலகி அவருக்கு பதில் அருண் விஜய்யை உள்ளே நுழைத்து பாலாவிற்கு ஆதரவு கரம் நீட்டினார் சுரேஷ் காமாட்சி. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரை கண்டு ரசிகர்கள் ரிலீஸ் எப்போது என கேள்வி எழுப்ப இந்த ஆண்டு ஏப்ரலில் வணங்கான் படத்தை ரிலீஸ் செய்வதாக கூறியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அதேபோல் ஏழு கடல் ஏழு மலை திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாகவே சர்வதேச திரைப்பட விழாவில் பங்கெடுத்து அனைவரும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நிவின்பாலி,அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை திரைப்படத்தை  ராம் இயக்கியுள்ளார்.  காதலர் தினத்தில் வெளியான இதன் பாடலை கேட்டு உருகியுள்ளனர்  ரசிகர்கள். இத்திரைப்படத்தை தேர்தலுக்குப் பின் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

Also read: சூர்யா கைவிட்ட 4 படங்கள்.. சிங்கத்துக்கு கூட முட்டி மோதி ட்ராப்பான வணங்கான்

Trending News