ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 16, 2025

புஷ்பா 3 கன்ஃபார்ம்.. தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

Pushpa 3 : சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மேலும் முதல் பாகத்தில் சமந்தா கவர்ச்சி நடனம் ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிரங்கடித்து இருந்தார். இந்த சூழலில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் புஷ்பா 2 படம் வெளியானது. இந்த படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூல் சாதனை படைத்தது.

இதனால் அல்லு அர்ஜுனின் மவுசு அதிகமானது. இதை தொடர்ந்து புஷ்பா 3 வருமா என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ராபின் ஹுட் படத்தின் விழாவில் கலந்து கொண்டார்.

புஷ்பா 3 படத்தை பற்றி கூறிய தயாரிப்பாளர்

அப்போது புஷ்பா 3 கண்டிப்பாக வரும் என்று உறுதியளித்துள்ளார். அல்லு அர்ஜுன் தற்போது அட்லீயின் படத்தில் கமிட்டாகி உள்ளார். இதைத்தொடர்ந்து திரிவிக்ரமுடன் ஒரு படம் இணைந்துள்ளார். அந்தப் படங்கள் முடித்த கையுடன் புஷ்பா 3 தொடங்கும் என கூறியுள்ளார்.

மேலும் சுகுமாரும் தற்போது ராம்சரணின் படத்தை இயக்கி வருகின்றார். ஆகையால் இருவருடைய கால்ஷீட் கிடைத்தவுடன் புஷ்பா 3 தொடங்கும். 2028ல் புஷ்பா 3 வெளியாகும் என தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்த செய்தி அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. புஷ்பா 2 படம் உலக அளவில் கிட்டதட்ட 1650 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News