தமிழ் சினிமாவில் பல தயாரிப்பாளர்கள் பல நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து காணாமல் போயுள்ளனர். ஆனால் அதில் ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டுமே இன்றுவரை நிலைத்து நின்று படங்களை தயாரித்து வருகின்றனர். குறிப்பாக ஏவிஎம் மற்றும் நிக் ஆர்ட்ஸ் போன்ற பல தயாரிப்பு நிறுவனங்கள் ஆரம்ப காலத்தில் பல படங்களை தயாரித்தும் தற்போது ஒரு படத்தை கூட தயாரிக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு பலரும் பலவிதமான காரணங்களை கூறி வருகின்றனர். ஒருபக்கம் தயாரிப்பாளர்கள் சரியான முறையில் படங்களை தயாரிப்பதில்லை என்றும், மேலும் இயக்குனர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி பணத்தை செலவிடுவதும் ஒரு காரணம் என கூறி வருகின்றனர்.
தற்போது தயாரிப்பாளர்கள் பலரும் பணம் இருந்தால் போதும் படத்தை தயாரித்து பணம் சம்பாதித்து விடலாம் என்ற வெளிப்படையான கண்ணோட்டத்தின் மூலமாகவே படங்களைத் தயாரித்து வருகின்றனர். ஆனால் படம் தயாரிப்பதற்கு பணம் இருந்தால் மட்டும் பத்தாது ஒரு படத்தை எப்படி தியேட்டர் உரிமையாளர்கள்க்கு கொடுப்பது, மேலும் ரசிகர்களிடம் அதனை எப்படி கொண்டு போய் சேர்ப்பது போன்ற பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.
அதாவது ஆரம்பத்தில் டீ விற்றவன்தான் அதன்பிறகு டீ கடை முதலாளியாக மாறுவான். அதுபோல்தான் தயாரிப்பாளராக ஆவதற்கு முதலில் பெரிய தயாரிப்பாளரிடம் கூட்டணி அமைத்து படத்தை எப்படி தியேட்டருக்கும், ரசிகர்களிடமும் எப்படி படத்தை கொண்டு போய் சேர்ப்பது போன்ற ஒரு சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் பெரிய தயாரிப்பாளரிடம் கூட்டணி அமைத்து கோ ப்ரோடியுசர் முறையில் சிறிதளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும். பின்பு படம் வெற்றி பெற்றால் லாபத்தில் பங்கு கொள்வதும், படம் தோல்வியடைந்தால் அசலை மட்டும் பெற்றுக்கொள்வது போன்று பேச்சுவார்த்தையின் மூலம் படம் தயாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தற்போது தயாரிப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாத தயாரிப்பாளர்கள் ஆரம்பத்தில் கார் மூலம் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வருவார்கள். பின்பு நாளடைவில் பேருந்தில் செல்லும் நிலைமை ஏற்படுமென தயாரிப்பாளர் விஜய்யின் முரளி வெளிப்படையாக கூறியுள்ளார்.
படத்தில் தயாரிப்பதை விட படத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள், எதற்காக செலவு செய்கிறார்கள் என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இயக்குனர்கள் அளவுக்கு மீறி செலவு செய்வதை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.