வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஷால் மீது அடுக்கிக் கொண்டே போகும் புகார்.. செக் வைத்த தயாரிப்பாளர்

சில காலங்களாக விஷாலை பற்றி தொடர்ந்து பல புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இவர் நடிக்கும் படங்களில் அடிக்கடி இயக்குனருடன் விஷாலுக்கு சண்டை வந்து கொண்டே இருக்கிறது. ஏனென்றால் எந்த ஒரு படப்பிடிப்பிலும் விஷால் ஒழுங்காக கலந்து கொள்வது இல்லையாம்.

இதனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுகிறதாம். ஆனால் இதையெல்லாம் கேட்டால் உங்களுக்கு என்ன நஷ்டம், என் சம்பளத்தில் கழித்துக் கொள்ளுங்கள் என அசால்ட்டாக விஷால் சொல்லிவிட்டு செல்கிறாராம். இதனால் விஷாலுக்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் விஷாலின் நண்பர்களான நந்தா பற்றும் ரமணா இருவரும் தயாரிக்கும் லத்தி படத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயற்றியுள்ளார். இது ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக உருவாகிறது. மேலும் இது விஷாலின் முதல் பான் இந்திய திரைப்படமாகும்.

லத்தி படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்திலும் விஷால் ஆல் ஏகப்பட்ட பிரச்சனை வந்துள்ளதாம். இப்படத்தின் சூட்டிங் வராமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்துள்ளார். இதனால் 25 நாள் சூட்டிங் இருக்கும்போதே விஷாலுக்கு தெரியாமல் அவரது நண்பர்கள் நந்தா மற்றும் ரமணா இருவரும் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டார்களாம்.

அதாவது ஆகஸ்ட் 12ஆம் தேதி உலகம் முழுவதும் லத்தி படம் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் லத்தி படம் குறித்த தேதிக்கு வெளியாகவில்லை என்றால் விஷாலுக்கு தான் பெரிய அவமானம். இதனால் விஷால் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாராம்.

மேலும் மிக விரைவில் படத்தின் ஷூட்டிங்கை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனால் கண்டிப்பாக விஷால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.

Trending News