திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

காட்டுன கவர்ச்சிக்கு இது கூட இல்லைன்னா எப்படி.. தயாரிப்பாளர்களை தெறித்து ஓட வைக்கும் சமந்தா!

மலையாளம் மற்றும் தெலுங்கு தம்பதியர்களுக்கு பிறந்த சமந்தா சென்னையிலேயே வளர்ந்ததால் மிக அழகாக தமிழ் பேசும் நடிகை என்பதால் வெகு சீக்கிரமே தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படங்களை நடித்து தென்னிந்திய நடிகையாக ஒரு ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

சில காலம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் ஆகி வாழ்ந்து கொண்டிருந்த நிலையில், அந்த உறவில் இருந்து பிரிந்து தற்போது விவாகரத்து பெறும் முடிவுக்கு வந்துவிட்டார். அதன் பிறகு சமந்தா மூன்று, நான்கு மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது தெலுங்கில் ‘குஷி’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் ஜோடியாக நடித்த முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்ததுடன், விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது. இவர் சினிமாவில் தென்னிந்திய நடிகையாக மாறியது அதுமட்டுமின்றி, அதன்பிறகு தற்போது பாலிவுட்டிலும் கவர்ச்சி புயலாக  மாறிக் கொண்டிருக்கிறார்.

இப்படி அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் சமந்தா, கிடுகிடுவென தன்னுடைய சம்பளத்தை ஏற்றி தயாரிப்பாளர்களை கதிகலங்க வைத்திருக்கிறார். அத்துடன் இப்பொழுது பாலிவுட்டிலும் சமந்தாவிற்கு மவுசு அதிகமாகிவிட்டது என கெத்து காட்டி பெரிய நடிகர் நடிகைகள் வாங்கும் அதிக சம்பளம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இதற்கும் பத்தாமல் பிரபல ஆடை நிறுவனத்தின் வடிவமைப்பாளராக சமந்தா தன்னுடைய தொழிலும் மும்முரமாக செயல்பட்டு அதிலும் காசு பார்த்துக் கொண்டிருக்கிறார், இப்படி சினிமாவிலும் தொழிலிலும் மும்முரமாக செயல்படும் சமந்தா, விவாகரத்து செய்த பிறகு கணவனிடமிருந்து ஜீவனாம்சம் ஆக ஒரு பைசா கூட வாங்க மாட்டேன் என வீர வசனம் பேசியதற்கு ஏற்றாற்போல் தற்போது சினிமாவிலும் தன்னுடைய சம்பளத்தில் கறாராக இருக்கிறார்.

இதனால் அடுத்தடுத்த படங்களை சமந்தாவை வைத்து எடுக்கலாம் என பிளான் போட்ட சின்ன சின்ன தயாரிப்பாளர்கள் அவரை அணுகவே யோசிக்கின்றனர். ஏனென்றால் எவ்வளவு சம்பளம் கேட்கப் போகிறார் எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

Trending News