சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

தியேட்டரை தாண்டி ஓடிடி-யில் பெத்த லாபம் பார்க்கும் தயாரிப்பாளர்கள்.. அடிமடியில் கை வைத்த பெரும் முதலைகள்

Theatre Owners conditions: தமிழ் சினிமாவில் தற்போது எக்கச்சக்கமான படங்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே வருகிறது. அந்த படங்கள் அனைத்தும் தியேட்டர்களில் கொஞ்ச நாள் ஓடிய பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக தியேட்டர் உரிமையாளர்கள் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் சில வேண்டுகோளை வைத்திருக்கிறார்கள்.

அதாவது எந்த ஒரு புது படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனாலும் அந்தப் படங்கள் 8 வாரம் கழித்த பிறகு தான் ஓடிடி-யில் திரையிட வேண்டும். மேலும் ஓடிடி-யில் வெளிவரும் புது திரைப்படங்கள் அனைத்தும் நான்கு வாரங்கள் கழித்த பிறகு தான் விளம்பர செய்யவேண்டும். அத்துடன் விளம்பர போஸ்டருக்கு 1% பப்ளிசிட்டி நீக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.

Also read: கோமாவில் இருந்த மகன்.. நாசருக்காக தவறாமல் விஜய் கொடுக்கும் சர்ப்ரைஸ்

அதோடு மட்டுமல்லாமல் புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% தான் பங்கு தொகையாக கேட்க வேண்டும். இதெல்லாம் விட இன்னும் லாபத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக திரையரங்குகளில் வெளியிடப்பட்ட படங்கள் ஓடிடி-க்கு வந்த பிறகு தயாரிப்பாளர்களுக்கு வரும் வருமானத்திலிருந்து ஒரு பங்கை திரையரங்க சங்கத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

திரையரங்க உரிமையாளர்கள் அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் தயாரிப்பாளர்களின் அடி மடியிலேயே கையை வைத்து வருகிறார்கள். இது மட்டுமில்லாமல் அரசாங்கத்திடமும் சில கோரிக்கைகளை கேட்டு வருகிறார்கள். அதாவது திரையரங்க பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலங்களில் வசூலிப்பது போலவே வசூலிக்க வேண்டும். இதெல்லாம் விட முக்கியமாக அவர்கள் கேட்பது திரையரங்குகள் கமர்சியல் ரீதியாகவும் நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதுதான்.

Also read: 73 வயதில் ரஜினிக்கு ஆக்சன் தேவையா.. ஜெயிலர் படமும் ஊத்திக்குமுன்னு சாபமிட்ட பிரபலம்

அப்படி என்றால் கிரிக்கெட் மேட்ச், டென்னிஸ் மற்றும் மிஸ் வேர்ல்ட் இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் அனைத்தையும் திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். மேலும் மின்சார கட்டணங்கள், சொத்துவரி இவைகள் அனைத்தும் திரையரங்குகளில் குறைத்து வசூலிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அத்துடன் பெரிய இயக்குனர்கள் அனைவரும் வருடத்திற்கு முன்னணி ஹீரோக்களை வைத்து ஒரு படம் எடுப்பதற்கு பதிலாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களை வைத்து வருடத்திற்கு நான்கு படங்கள் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது போன்ற விஷயங்களை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் மற்றும் அரசாங்கமும் நாங்கள் கேட்ட கோரிக்கைக்கு செவி சாய்த்து தீர்வு கொடுக்க வேண்டும் என்று என்று கேட்டுள்ளார்கள்.

Also read: வைரமுத்துவை ஒப்பிட்டு பேசிய சூப்பர் ஸ்டார்.. மேடையில் கடித்து குதறிய சம்பவம்

Trending News