புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தீவிர அரசியலில் கால் பதிக்கும் விஜய்.. திடீர் முடிவால் பயத்தில் இருக்கும் தயாரிப்பாளர்கள்

Actor Vijay: லியோ படத்தை முடித்த கையோடு விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்க இருக்கும் தன்னுடைய 68வது படத்தில் இணைய இருக்கிறார். எந்த ஆரவாரமும் இல்லாமல் சமீபத்தில் இதன் அறிவிப்பு வெளிவந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.
ஆனால் இப்போது இந்த படம் ஆரம்பிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஏனென்றால் விஜய் இப்போது சினிமாவில் கவனம் செலுத்துவதோடு மட்டுமின்றி தீவிர அரசியலிலும் இறங்குவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படி இரட்டை குதிரைகளில் சவாரி செய்ய திட்டம் போடும் அவர் அதற்கான முழு திட்டத்தையும் பக்காவாக போட்டுள்ளார்.

Also read: மீண்டும் மீண்டும் விஜய் மானத்தை வாங்கும் எஸ்.ஏ.சி.. 78வது பிறந்த நாளின் ஷாக்கிங் புகைப்படம்

அதன் முதல் படியாக சமீபத்தில் மாணவர்களோடு சந்திப்பு நடத்திய விஜய் இப்போது 2026 ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து இருக்கிறார். அதற்காக மூன்று வருட காலம் சினிமாவுக்கு பிரேக் போடவும் அவர் ஆயத்தமாகி இருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் அவர் 3 ஆண்டு காலம் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்து இருக்கிறாராம். இது இப்போது திரையுலக வட்டாரத்தை மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்தையும் கலங்கடித்துள்ளது. இப்படி தீவிர அரசியலில் கால் பதிக்க இருக்கும் விஜய்யின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எனவும் அவர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.

Also read: ஜெயிலரை ஓரங்கட்ட தயாராகும் லியோ.. நிற்க நேரமில்லாமல் பிசியான லோகேஷ்

அது மட்டும் இன்றி விஜய்யின் இந்த முடிவால் தயாரிப்பாளர்கள் தான் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள். ஏனென்றால் விஜய் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே அதற்கான சாட்டிலைட் மற்றும் ஓடிடி பிசினஸ் தாறுமாறாக உயரும். இதனாலேயே பல முன்னணி நிறுவனங்கள் விஜய்க்கு அதிக சம்பளம் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது அவர் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்திற்காகவும் 200 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறார். இப்படி பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக இருக்கும் விஜய் திடீரென இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தளபதி 68 திட்டமிட்டபடி உருவாகுமா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

Also read: ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்ட த்ரிஷா.. விஜய் படத்தால் வந்த மறுவாழ்வு

Trending News