வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

எஸ் ஜே சூர்யா இனி படங்களில் நடிக்க தடை.. பணம் பத்தும் செய்யும் என்பது இதுதான்

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, பின்னர் இயக்குனர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், கதாசிரியர், இசையமைப்பாளர் என பல  அவதாரங்கள் எடுத்தவர் தான் எஸ் ஜே சூர்யா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றி வருகிறார்.

அதேபோல் எஸ்ஜே சூர்யா முதன் முதலாக இயக்கிய படம் வாலி என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் எஸ் ஜே சூர்யா நியூ படத்தில் நடித்ததை தொடர்ந்து, கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் SJ சூர்யாவின் நடிப்பு பெரும் அளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில் SJ சூர்யாவிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது  வித்தியாசமான  கதைக்களத்தை கொண்ட படங்களின் மூலம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் எஸ்ஜே சூர்யா தனக்கென்று என்று தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

தற்போது எஸ் ஜே சூர்யா படம் நடிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக தடை விதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சூர்யாவிற்கும் ‘இசை’ படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவிற்கும் இடையே உள்ள பிரச்சனைதானாம்.

ஏனென்றால் இதில் பிரச்சனை நடிகர் எஸ் ஜே சூர்யாவிற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் கிடையாதாம். தயாரிப்பாளர்  சூர்யாவிற்கும் ஞானவேல்ராஜாவிற்கும் தான் பிரச்சனையாம். அது எவ்வாறு என்றால், இருவரும் இணைந்து தான் இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்ததாம்.

ஆனால் எஸ் ஜே சூர்யா ஞானவேல் ராஜாவிடம் இருந்து வாங்கிய பணத்தை இன்றுவரை திரும்பக் கொடுக்காமல் இருக்கிறாராம். இசை படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் பணம் கொடுக்காமல் இருப்பதால் ஞானவேல்ராஜா இவர் மீது செம கடுப்பில் உள்ளாராம். இதனால் அவர் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளாராம்.

sj-suriya-cinemapettai
sj-suriya-cinemapettai

அதன் அடிப்படையில்தான் எஸ் ஜே சூர்யா இனி எந்த படத்திலும் நடிக்கக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ரெட்க்கார்டு வழங்கப்பட்டுள்ளதாம். இந்தத் தகவல்கள் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

Trending News