புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஆட்டம் காணும் சினிமா வாழ்வு.. விவாகரத்து நடிகரை அவாய்ட் செய்யும் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து, விருதுகளை வாங்கிக் குவித்த அந்த நடிகரின் திரைப்படங்கள் அனைத்தும் சமீபகாலமாக தோல்வியை தழுவி வருகிறது. இதனால் பல சிக்கலில் இருக்கும் நடிகர் எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது தான் இதற்கு காரணம் என்று பலரும் கூறுகின்றனர். ஆரம்ப காலத்தில் ஏதோ சில திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த அந்த நடிகர் உச்ச நடிகரின் மாப்பிள்ளையாக மாறியதற்கு பிறகுதான் அதிர்ஷ்டக்காற்று அவர் பக்கம் வீசியது.

அந்த அந்தஸ்து தான் அவருக்கு வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. தன் மகளை வேண்டாம் என்று தூக்கி எறிந்த நடிகருக்கு பாடம் புகட்டும் வகையில் உச்ச நடிகரின் குடும்பம் தான் நடிகருக்கு தொடர் தொல்லைகள் கொடுத்து வருவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.

தற்போது நடிகரின் இந்த தொடர் தோல்விகளுக்கு அதுதான் காரணமாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நடிகர் இந்த அளவுக்கு சினிமாவில் உயர்ந்ததற்கு அந்த வெற்றி இயக்குனர் தான் காரணம். ஆனால் இப்போது அவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ண முடியாத நிலையில் இருக்கின்றனர்.

மேலும் உச்ச நடிகர் தற்போது மருமகன் மேல் பயங்கர கோபத்தில் இருப்பதாகவும் ஒரு தகவல் உலா வந்தது. இதையெல்லாம் பார்த்த பிரபல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தற்போது அந்த நடிகரை தங்கள் படங்களில் புக் பண்ண தயங்கி வருகிறார்களாம்.

இதனால் தற்போது தன்னுடைய சினிமா வாழ்வு ஆட்டம் கண்டுள்ள அதிர்ச்சியில் இருக்கிறாராம் அந்த நடிகர். தனக்கு இருந்த நல்ல பெயரை எல்லாம் எடுத்துக் கொண்ட நிலையில் எப்படியாவது அதை சரிசெய்யும் முயற்சியில் நடிகர் தீவிரமாக இருப்பதாக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது

Trending News