திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

திருந்திய ஜெய்.. கையெடுத்துக் கும்பிடும் தயாரிப்பாளர்கள்

விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜெய். அதனைத் தொடர்ந்து சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகராக மாறினார்.

மாபெரும் வெற்றி பெற்ற சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு ஜெய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களுக்கும் எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால் அதை பூர்த்தி செய்ய தவறி விட்டார் என்று சொல்லித்தான் ஆகவேண்டும்.

கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததால் இவருக்கு சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் போனது. இருந்தாலும் அவ்வப்போது வெளிவரும் வெங்கட்பிரபு படங்களினால் இவரது பெயர் கோலிவுட்டில் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் ஜெய் மீது புகார் சொல்லாத தயாரிப்பாளர்களே கிடையாது. தயாரிப்பாளர்களின் பணத்தில் கூத்தடிப்பது, சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வராமல் பலகோடி நஷ்டங்களை ஏற்படுத்துவது என அடுக்கடுக்கான புகார்கள் இவர்மீது சொல்லப்பட்டது.

ஆனால் சமீபத்தில் ஜெய் செய்ததைப் பார்த்து இதே போல் இனி வரும் படங்களில் செய்தால் தயாரிப்பாளர்கள் பலரும் தப்பித்துக் கொள்வார்கள் என்று கூறுகின்றனர். அப்படி என்ன செய்தார் என்றுதானே கேட்கிறீர்கள்.

சுந்தர் சியும் ஜெய்யும் ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சுந்தர் சியின் ஆஸ்தான இயக்குனர் பத்ரி என்பவர் இயக்கி வருகிறார். இதில் ஜெய்க்கு நெகட்டிவ் வேடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அவருக்கு அடிபட்டதாம். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் படக் காட்சிகளில் நடித்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டதால் ஒருவழியாக ஜெய் திருந்தி விட்டார் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள். இந்த காட்சியை அப்போது எடுக்கவில்லை என்றால் இன்னும் சில மாதங்கள் இழுத்திருக்கும் எனவும் கூறுகின்றனர்.

jai-cinemapettai
jai-cinemapettai

Trending News