செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

படமே இல்லாமல் தலைகணத்தோடு ஆடும் நயன்தாரா.. ஓவர் அட்ராசிட்டியால் பின் வாங்கும் தயாரிப்பாளர்கள்

Actress Nayanthara: நயன்தாரா என்றால் சர்ச்சை தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் எப்போதுமே ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டு தான் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவர் நான் தான் நம்பர் ஒன் என்ற தலைக்கணத்தோடு இருப்பது தான்.

அது மட்டுமல்லாமல் தொடர்ந்து ஹீரோயின் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் இவர் ஹீரோக்களையே ஓரம் கட்டும் அளவுக்கு தன் சம்பளத்தையும் உயர்த்தி வருகிறார். தற்போது அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் ஓவர் அலப்பறை செய்து வருகிறாராம்.

Also read: நயன்தாராவுக்கு போட்டியாக பாலிவுட்டில் இறங்கும் ஹீரோயின்.. பெட்டிகளை இறக்கி அட்லீ எடுத்த புது அவதாரம்

இதன் காரணமாகவே பல பேர் கொடுத்த அட்வான்ஸ் கூட திரும்பி வாங்கி வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் கல்யாணத்திற்கு பிறகு நயன்தாரா போடும் புதுப்புது கண்டிஷன் தான். அதாவது திருமணத்திற்கு முன்பு நயன்தாரா அன்னபூரணி என்ற படத்தில் லீட் ரோலில் நடிப்பதாக இருந்தது.

சில காரணங்களால் தாமதிக்கப்பட்ட அந்த படத்தை இப்போது மீண்டும் தொடங்க இருக்கின்றனர். திருச்சியில் படப்பிடிப்பை நடத்தலாம் என்று முடிவுபட்ட நிலையில் நயன்தாரா அங்கெல்லாம் என்னால் வர முடியாது என்று கராராக கூறுகிறாராம். சென்னைக்குள்ளேயே படப்பிடிப்பு இருந்தால் ஓகே, அவுட்டோர் ஷூட்டிங் எல்லாம் என்னால் வர முடியாது என்று திமிராகவும் சொல்கிறாராம்.

Also read: உங்கள மலைபோல் நம்பி இருந்தன் கால வாரி விட்டுட்டீங்க.. விக்கிரமால் பரிதவிக்கும் அடுத்த நயன்தாரா

இது கல்யாணத்திற்கு பிறகு அவர் எடுத்த முடிவுதான். அது மட்டுமல்லாமல் தற்போது தன்னுடைய சம்பளத்தையும் 12 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இப்படி எல்லாம் அவர் அட்ராசிட்டி செய்ய என்ன காரணம் என்று பார்க்கையில் நயன்தாரா தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கலாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

ஏற்கனவே சொந்த தொழிலில் லாபம் பார்த்து வரும் இவர் தற்போது தன் குடும்பம், குழந்தை என்று ஓய்வெடுக்க முடிவு செய்திருப்பதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அதனால் தான் இப்படி சாக்கு போக்கு சொல்லி வாய்ப்புகளை எல்லாம் ஒதுக்குகிறாராம். இருப்பினும் இவருடைய அட்ராசிட்டியால் தான் பல தயாரிப்பாளர்கள் பின்வாங்குகிறார்கள் என்பது மட்டும் உண்மை.

Also read: சின்னத்திரை நயன்தாராவுடன் ஜோடி சேரும் யோகி பாபு.. மண்டேலாவுக்கு மட்டும் அதிர்ஷ்டம் கூறை பிச்சுக்கிட்டு கொட்டுது

Trending News