விஷால் என்று சொன்னாலே தயாரிப்பாளர்கள் ஒரு அடி பின் வாங்குகிறார்கள். திடீரென இவருக்கு ரெட் கார்டு போட்டிருக்கிறோம் என யாராவது பிரச்சனைக்கு வந்து விடுகிறார்கள். அது மட்டும் இன்றி இப்பொழுது விஷால் படங்கள் பிசினஸ் கொஞ்சம் டல்லடித்து வருகிறது.
வீரமே வாகை சூடும், லத்தி, மார்க் ஆண்டனி, ரத்னம், என எந்த படங்களும் இவருக்கு கை கொடுக்கவில்லை. இதில் மார்க் ஆண்டனி மட்டும் அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. இப்பொழுது அவர் கேட்கும் சம்பளமும் அதிக அளவில் இருப்பதால் தயாரிப்பாளர்கள் அனைவரும் விஷால் என்றால் சற்று யோசனை செய்கிறார்கள்.
துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த சில வருடங்களுக்கு முன் எடுக்கலாம் என யோசித்த, மிஸ்கின் மற்றும் விஷால் இருவரும் இப்பொழுது மனக்கசப்பு காரணமாக பிரிந்து விட்டனர். ஏற்கனவே அவர்களுக்குள் வாய்க்கா தகராறு இருந்த நிலையில், சமரசம் பேசி அந்த படத்தை எடுக்க முயற்சி செய்தனர்.
துப்பறிவாளன் இரண்டு எடுப்பதற்கு கதை எல்லாம் மிஸ்கின் எழுதிவிட்டார் ஆனால் மீண்டும் இருவருக்கும் பிரச்சனை வந்து படத்தை கைவிட்டு விட்டார்கள். அதனை தானே இயக்கப் போவதாக விஷால் கூறிக் கொண்டிருந்தார் இப்பொழுது அந்த முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை
20 கோடிகள் சம்பளம் கேட்கிறார் விஷால். சமீபத்தில் சத்யஜோதி நிறுவனத்துடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் விஷால் ஆனால் அந்தப் படத்திற்கு இவர் கேட்ட சம்பளத்தால் அந்த நிறுவனம் பின்வாங்கியது. இப்படி வந்த வாய்ப்புகளை எல்லாம் வீணடிக்கிறார் வளந்த தம்பி.