செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பிரபாஸை நம்பி ரூ.2150 கோடி.. குவிந்து கிடக்கும் படங்கள்.. கல்லா கட்டுமா பிசினஸ்?

பான் இந்தியா ஸ்டாராக அறியப்படும் பிரபாஸை நம்பி சினிமாவில் அவர் புதிதாக நடிக்கவுள்ள படங்களுக்காக 2 ஆயிரம் கோடிக்கு அதிகமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஒரு நாயகன் உருவாகிறார்

பிரபஸ் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் படத்தின் மூலம் ஹீரோவாக அறியப்பட்டார். அதன்பின்னர், 2004 ஆம் ஆண்டு வருடம் என்ற படம் மூலம் பிரபலமானார். இதையடுத்து மிர்ச்சி, முன்னால், டார்லிங், பெர்பெக்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதிலும் இடம்பித்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

இவர் தொடர்ந்து படங்களிலும் முன்னணி இயக்குனர்களுடன் சேர்ந்து பணியாற்றி வந்தாலும் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபாஸ் – ராஜமெளலி கூட்டணியில் வெளியான பாகுபலி படம் மெகா ஹிட் படமாக அமைந்ததுடன், அதுவரை இந்தியாவில் இத்தனை கோடி பட்ஜெட்டில் படமெடுத்தாலும் இந்தியாவிலும், உலகளவிலும் மார்க்கெட் இருக்குமா? போட்ட பணத்தை எடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் படமாக மட்டும் அல்லாமல் இந்தியாவிலும் இப்படிப்பட்ட படங்கள் எடுத்து வெற்றி பெற முடியும் என்பதற்கு முன் மாதிரிப் படமாகவும் பாகுபலி அமைந்தது.

இந்திய சினிமாவை புரட்டிப் போட்ட பாகுபலி

பாகுபலி படம் சூப்பர் ஹிட்டாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில்ம் பாகுபலி 2 வது பாகமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. எனவே இவ்விரு படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பின் பான் இந்தியா ஸ்டாராக எல்லா மொழிகளிலும் முன்னணி நடிகராக அறியப்பட்டு அவரது ஒவ்வொரு படத்திற்குமான எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் பிரபாஸ் நடிப்பில் பாகுபலி படத்திற்குப் பின் வெளியான எந்தப் படமும் பெரியளவில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக சாஹோ, ராதே ஸ்யாம், சலார் போன்ற படங்கள் பிரபாஸின் மார்கெட்டை மையப்படுத்தி பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டாலும் அவை போதிய வரவேற்பை பெறவில்லை.

இதையடுத்து சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், கமல் வில்லனாகவும் நடித்து அசத்திய படம் கல்கி 2898 ஏடி. இப்படம்தான் பிரபாஸுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தது. அதன்படி பாக் ஆபிஸீல் புதிய சாதனை படைத்துள்ளது இப்படம். இதனால் மீண்டும் பிரபாஸ் நடிக்கும் நடிக்கும் படங்களுக்கு எதிர்பார்ப்பும், முதலீடும் அதிகரித்துள்ளது.

மெகா பட்ஜெட் படங்களில் ரூ.2000 கோடி முதலீடு

பிரபாஸ் நடிக்கும் படங்கள் தியேட்டரிக்கல், ஓடிடி, டிஜிட்டல் பிளாட்பார்ம், சேட்டிலைட் விற்பனையிலும் பெரிய தொகைக்கு விற்பனையாகும் என்பதால் அவரது படங்களுக்கான வியாபாரம் என்பது எப்போதும் பெரியளவில் இருக்கும். அந்த வகையில் அவர் அடுத்து நடிக்கவுள்ள படங்களுக்கு ரூ.2000 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்கள் பணத்தைப் போட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது,

சலார் : அதன்படி, பிரசாந்த் நீல்- பிரபாஸ் கூட்டணியில் உருவாகி ரிலீஸான சலார் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இப்படத்தின் 2 வது பாகத்தை ஹம்பாலே தயாரிக்கவுள்ளது. இதில் பிரபாஸுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆக்சன் பாணியில் உருவாகும் இப்படத்தை விஜய் கிரகந்தூர் இணைந்து தயாரிக்கிறார்.

ஸ்பிரிட்: அதேபோல் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் ஸ்பிரிட். இதில் சந்தீப் ரெட்டி வங்காவுடன் முதன்முறையாக பிரபாஸ் இணைந்துள்ள நிலையில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இவர் இயக்கில் சமீபத்தில் வெளியான அனிமல் படம் பெரிய ஹிட் ஆன நிலையில், பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தையும் அனிமல் படத்தைவிட அதிகளவில் ரீச் செய்ய சந்தீப் ரெட்டி தயாராகி வருகிறார்.

ஃபாஜி : இயக்குனர் ஹனு ராகவ புடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படம் ஃபாஜி. இப்படம் 1940 களில் நடக்கும் சரிந்திர பின்னணியுடன் இப்படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படத்தை ஒரு முன்னணி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

ராஜா சாப் : இதையடுத்து, இயக்குனர் மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் ராஜா சாப் படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகன, நிதி அகர்வால், முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். ராஜா போன்ற கம்பீரத்தில் பிரபாஸ் உட்கார்ந்திருக்கும் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை பீப்பிள் மீடியா தயாரிக்கும் நிலையில் காமெடி ஆக்சன் பாணியில் இது உருவாகவுள்ளது.

கல்கி -2 : அடுத்து கடந்த ஜூன் 27 ஆம் தேதி தியேட்டரில் வெளியான கல்கி படத்தில் 2 வது பாகத்தில் பிரகாஸ் நடிக்கவுள்ளார். இதில், பிரபாஸுடன் இணைந்து கமல், தீபிகா படுகோன் நடித்திருந்த நிலையில் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2 வது பாக்த்தை நாக் அஸ்வின் இயக்கவுள்ளார். இப்படம் வரும் பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் பிறந்த நாளை கொண்டடிய பிரபாஸ் இந்தியாவில் இதுவரை எந்த நடிகரும் இல்லாத வகையில் தொடர்ந்து பல மெகா புராஜக்டுகளில் நடித்து வருகிறார்.

பிரபாஸ் தோளில் சுமை

ரூ.2100 கோடி முதலீட்டில் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் உருவாகி வரும் நிலையில் இதன் மூலம் பணத்தை முதலீடு செய்யும் நிறுவனங்கள் டபுள் மடங்கு லாபம் பார்க்க கணக்குப் போடத் துவங்கியுள்ளனர். ஆனால் அப்படங்கள் வெற்றி பெறுவது பிரபாஸின் கையில் மட்டுமல்ல, அப்படங்களின் கதை, திரைக்கதை, இயக்குனர், பொருட்செலவு இதையெல்லாம் பொருத்து அப்படங்கள் வெற்றி பெரும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Trending News