வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ப்ராஜெக்ட் கே நடிகர் நடிகைகளின் ஒட்டு மொத்த சம்பள லிஸ்ட்.. பிரபாஸை விட கமலுக்கு இவ்வளவு கம்மியா!

கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்று தந்த நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின், தெலுங்கு நடிகர் பிரபாஸை கதாநாயகனாக வைத்து இயக்கும் படம் தான் ப்ராஜெக்ட் கே. இந்தப் படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக உலகநாயகன் கமலஹாசன் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தனர். இதற்காக அவர்கள் 150 கோடி சம்பளம் கொடுப்பதாகவும் வதந்திகள் பரவியது.

ஆனால் இப்போது வெளியாகியிருக்கும் தகவலின் படி ப்ராஜெக்ட் கே படத்திற்கு பிரபாஸிற்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்த தயாரிப்பாளர், உலக நாயகனுக்கு கிள்ளி கொடுத்து இருப்பது எந்த விதத்தில் நியாயம் என சோசியல் மீடியாவில் கமல் ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். தற்போது இந்த படத்தில் நடிக்கும் முக்கிய பிரபலங்களின் சம்பள விவரம் வெளிவந்துள்ளது.

Also Read: யாரும் தேவையில்லை என்று டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்த 7 இயக்குனர்.. பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த உலக நாயகன்

படத்தின் கதாநாயகன் பிரபாஸ் இந்த படத்தில் முதன்முதலாக 150 கோடியை சம்பளமாக பெற்றிருக்கிறார். பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு 20 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு முன்பு தீபிகா படுகோன் அதிகபட்சமாக 13 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.

அதேபோல இந்த படத்தில் இருக்கும் இன்னொரு கதாநாயகியான திஷா பதானிக்கு 5.5 கோடி சம்பளம் கொடுத்திருக்கின்றனர். மேலும்  அதேபோல இந்த படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை அமிர்தா பச்சனுக்கு 3 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இதில் வில்லனாக நடிக்கப் போகும் கமலுக்கு 25 கோடி மட்டும் தான் சம்பளமாக கொடுத்திருக்கின்றனர்.

Also Read: ராமர் சோலியை முடித்து அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் பிரபாஸ்.. ப்ராஜெக்ட் கே-ல் எடுக்க போகும் அவதாரம்

இந்த படம் தமிழகத்தில் எந்த அளவிற்கு வசூலிக்கப் போகிறதோ என்ற சந்தேகத்தில் தான் கமலுக்கு இவ்வளவு கம்மியாக சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக அதிர்ச்சியான தகவலும் கசிந்துள்ளது. கோலிவுட்டில் ஜாம்பவானாக இருக்கக்கூடிய உலக நாயகன் எதற்காக டோலிவுட்டில் அசிங்கப்பட வேண்டும். அதிலும் தெலுங்கில் இவ்வளவு கம்மியான சம்பளத்திற்கு வில்லனாக நடிக்க வேண்டிய அவசியமே இல்லை.

தமிழில் விக்ரம் படத்தில் பாக்ஸ் ஆபிஸை கலக்கிய உலக நாயகன், அடுத்ததாக இந்தியன் 2 படத்திற்குப் பிறகு அவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு இருக்கப்போகிறது. அப்போதிலிருந்து இப்போது வரை தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும் கமல், டோலிவுட்டிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதுதான் ரசிகர்களின் கருத்து.

Also Read: கமலின் பெரிய ரசிகன் யார்.? லோகேஷை ஓரங்கட்டி மாஸ் காட்டிய இயக்குனர்

Trending News