ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

7 படங்களில் வில்லனாக கமிட்டான SJ சூர்யா.. டாப் ஹீரோக்களுக்கு இணையாக பிசியான நடிகவேள்

SJ Suryah Upcoming Movies: இயக்குனரிலிருந்து நடிகர் அவதாரம் எடுத்து டாப் ஹீரோக்களை எல்லாம் மிரட்டிக் கொண்டிருக்கிறார் எஸ் ஜே சூர்யா. நடிப்பு அரக்கன், இவர் நடித்தாலே அந்த படம் வெற்றி தான் என ரசிகர்கள் அவரைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா xx படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எஸ் ஜே சூர்யாவை நடிகவேள் என்று சொல்லி இருக்கிறார். எஸ் ஜே சூர்யா அடுத்தடுத்து 7 படங்களில் வில்லனாக கமிட் ஆகி இருக்கிறார். அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

கைவசம் இருக்கும் ஆறு படங்கள்

உயர்ந்த மனிதன்: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் நடிக்கிறார். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் ஒரு சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த படம் மீண்டும் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இந்த படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் நடிக்க இருக்கிறார். இயக்குனர் தமிழ்வாணன் உயர்ந்த மனிதன் படத்தை இயக்குகிறார்.

ராயன்: நடிகர் தனுஷ் ஒரு இயக்குனராக பா பாண்டி படத்தில் ஜெயித்திருந்தார். அதைத் தொடர்ந்து அவருடைய ஐம்பதாவது படத்தையும் இயக்குகிறார். இந்த படத்திற்கு ராயன் என பேரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன் ஆகியவுடன் இணைந்து எஸ் ஜே சூர்யாவும் நடிக்க இருக்கிறார்.

Also Read:அது சூர்யாவுக்கான கதை, அவர்தான் நடிக்கணும்.. பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்த அஜித்

இந்தியன் 2: கமலஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பகுதி விரைவில் வெளியாக இருக்கிறது. 2019ஆம் ஆண்டு இந்த படத்திற்கான 60% படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டது. கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா இணைந்திருக்கிறார். கமல் மற்றும் எஸ் ஜே சூர்யா கூட்டணியில் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

இரவாக்காலம் : நடிகை நயன்தாராவை வைத்து மாயா என்னும் திரைப்படத்தை இயக்கியவர் தான் அஸ்வின் சரவணன். இவருடைய இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா இரவாகாலம் என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் அடுத்த வருடத்தில் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என செய்திகள் வெளியாகி இருக்கிறது.

கேம் சேஞ்சர்: இயக்குனர் சங்கர் நடிகர் ராம்சரனை வைத்து தெலுங்கில் இயக்கிக் கொண்டிருக்கும் படம் தான் கேம் சேஞ்சர். மிகப் பெரிய பொருட் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். கண்டிப்பாக தன்னுடைய சிறந்த நடிப்பால் தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர்ந்து விடுவார் என்பது எந்த சந்தேகமும் இல்லை.

நெல்சன்-கவின்: சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற டாடா படம் நடிகர் கவினை தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாக மாற்றி இருக்கிறது. இயக்குனர் நெல்சன் கவினை வைத்து ஒரு படம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதை தொடர்ந்து இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா கவினுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.

LIC: லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்க நாதனின் அடுத்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது. இவர் அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு எல்ஐசி என பெயரிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்திலும் எஸ்.ஜே சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார்.

Also Read:கவினை தூக்கி விடும் முரட்டு வில்லன்.. சர்ப்ரைஸ் கொடுத்து திணறடிக்க வரும் மெகா காம்போ

 

Trending News