வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விக்ரம் படத்தை மிஞ்சும் பிரமோஷன்.. விரைவில் வெளிவர உள்ள தளபதி 67 டீசர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நான்கு வருட இடைவெளிக்கு பிறகு நடித்த விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத அளவுக்கு வெற்றி பெற்றது. உலக அளவில் கவனம் பெற்ற இந்த படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.

அந்த வகையில் லோகேஷ் தற்போது விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். பல மாதங்களாகவே ரசிகர்கள் இந்த படம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்கள் காத்திருப்புக்கு பலனாக தற்போது தளபதி 67 படம் படு ஜோராக ஆரம்பமாக இருக்கிறது.

Also read: துப்பாக்கிகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட விஜய்.. தளபதி 67 போஸ்டரால் அதிர்ச்சியில் உறைந்த லோகேஷ்

அதற்கான வேலைகள் அனைத்தையும் தற்போது லோகேஷ் பரபரப்பாக செய்து வருகிறார். அதன் முதற்கட்டமாக தளபதி 67 படத்தின் அறிவிப்பு டீசர் சூட்டிங் ஆரம்பமாக இருக்கிறது. விக்ரம் திரைப்படம் ஆரம்பிக்கும் போது இதே போன்று தான் படு மிரட்டலாக ஒரு அறிவிப்பு டீசர் வெளியாகி இருந்தது. அதில் கமல் கூறும் ஆரம்பிக்கலாங்களா என்ற வசனம் இப்போது வரை ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

அதேபோன்ற ஒரு டீசர் தான் தற்போது வெளிவர இருக்கிறது. வரும் திங்கள்கிழமை ஆரம்பிக்கப்படும் அந்த ஷூட்டிங்கில் விஜய் பங்கேற்க இருக்கிறார். விக்ரம் பாணியில் இந்த அறிவிப்பு டீசரிலும் விஜய் பேசும் வசனம் நிச்சயம் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்று பட குழு தெரிவித்துள்ளது.

Also read: தளபதி 67 இந்த படத்தின் ரீமேக்கா?. சூப்பர் ஹிட் படத்தின் உரிமையை கைப்பற்றிய லோகேஷ்

ஏற்கனவே இந்த படத்தின் பிசினஸ் இப்போதே ஆரம்பிக்கப்பட்டு கோடிக்கணக்கில் வியாபாரம் ஆகி இருக்கிறது. அதைத்தொடர்ந்து இந்த அறிவிப்பு டீசரும் ரசிகர்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்ல இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்த படத்தில் கமல் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் லோகேஷின் முந்தைய படங்களில் இருக்கும் சில கேரக்டர்களும் இதில் காட்டப்பட இருக்கிறதாம்.

இதுவே படத்திற்கான மிகப்பெரிய பிரமோஷன் ஆக அமைந்துள்ளது. இதேபோன்றுதான் விக்ரம் திரைப்படத்திலும் அனைவருக்கும் சர்ப்ரைஸ் தரும் வகையில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மிரட்டி இருந்தார். அதேபோன்று தளபதி 67 திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் இடம் பெற இருக்கிறதாம். இப்படி படம் பற்றி வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களின் ஆவலை தூண்டி வருகிறது.

Also read: அஜீத்தின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்ய ஆசைப்படும் லோகேஷ்.. நீங்க வேற லெவல்ல யோசிக்கிறீங்க ப்ரோ!

Trending News