வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

15 வருடங்கள், 6 படங்கள்.. வெற்றியை மட்டுமே ருசிக்கும் வெற்றிமாறனின் சொத்து மதிப்பு

Vetrimaaran: யானைக்கும் அடி சறுக்கும் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். அது போல் எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் தோல்வி என்பதை கடந்து தான் வந்திருப்பார்கள். ஆனால் வெற்றியை மட்டுமே ருசிக்க வேண்டும் என்ற வெறியில் படங்களை இயக்கும் வெற்றிமாறன் இதுவரை ஆறு படைப்புகளை மட்டுமே கொடுத்திருக்கிறார்.

ஆனால் அந்த ஆறு படங்களும் காலம் கடந்தாலும் நினைவில் நிற்கும் அளவுக்கு தரமாக இருக்கிறது. அந்த வகையில் ஆடுகளம், அசுரன், விடுதலை என பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிமாறனுக்கான அடையாளமாகவும் மாறி இருக்கிறது.

Also read: அடுத்த 7 வருஷத்துக்கு ரொம்ப பிஸி.. நிற்க நேரமில்லாமல் பறக்கும் வெற்றிமாறன், கைவசம் இருக்கும் 6 படங்கள்

அதனாலேயே இப்போது டாப் ஹீரோக்கள் பலரும் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வாடிவாசல், வட சென்னை 2, விடுதலை 2, விஜய்யின் படம் என வெற்றிமாறன் அடுத்தடுத்து தன்னை பிசியாகவே வைத்திருக்கிறார்.

இப்படி வெற்றி இயக்குனராக இருக்கும் இவர் இன்று தன்னுடைய 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருக்கும் இவருடைய சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

Also read: சூர்யாவை டீலில் விட்டாரா வெற்றிமாறன்.? வருஷ கணக்கில் காக்க வைத்த வாடிவாசல், எதிர்பாராத ஷாக்

அதன்படி வெற்றிமாறன் இதுவரை 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்ததாக சூர்யாவை வைத்து அவர் இயக்க இருக்கும் வாடிவாசல் படத்திற்காக இவருக்கு 25 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம். இதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது இவர் ஒரு படம் எடுத்தாலே அதற்கு தேசிய விருது நிச்சயம் கிடைத்துவிடும்.

அந்த ஒரு காரணத்தினாலேயே இவருடைய சம்பளமும் தற்போது பல மடங்காக உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் வெற்றிமாறன் சினிமா துறைக்கு வந்த 15 வருடங்களில் 6 படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் 30 கோடி வரை சொத்துக்களை சேர்த்திருக்கிறார். இது குறைவாக பார்க்கப்பட்டாலும் இனிவரும் காலங்களில் இவருடைய சொத்து மதிப்பு உயரும் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.. விஜய் சேதுபதியை வழிக்கு கொண்டு வந்த வெற்றிமாறன்

- Advertisement -spot_img

Trending News