வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நான் ஒரு துறவி, 50 வருடமாய் ஆடம்பரம் இல்ல.. ரஜினியின் அசர வைக்கும் சொத்து மதிப்பு.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 167 திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தியவர். 70 வயதிலும் சூப்பர்ஸ்டாருக்கு என இன்றுவரை உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதற்கு காரணம் அவருடைய விடாமுயற்சியும் அவருடைய நடிப்பு, ஸ்டைல் என சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே வெள்ளை நிற ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்வார். வெள்ளை நிறத்தில் ஜிப்பா அதற்கு ஏற்றார் போல பேண்ட் என ரஜினிகாந்த் எந்த ஒரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் இப்படித்தான் உடை அணிந்து கொள்வார்.

Also Read : மீண்டும் ஒரே திரையில் கமல், ரஜினியை பார்க்க ஆசைப்பட்ட மணிரத்தினம்.. கடைசியில் அந்தர் பல்ட்டி அடித்த ஹீரோ

இன்று பேஷன் உலகில் பல ஆடைகள் வந்த பின்பும், பார்க்க துறவி போலவே ரஜினிகாந்த் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில் விருப்பம் கொள்வார். எந்த காரணத்தைக் கொண்டும் வெளி உலகத்தில் ஆடம்பரமான உடைகள், ஆபரணங்கள் என எதையும் பெரிதாக அணிய மாட்டார். அவர் கழுத்தில் ருத்ராட்சை கோட்டை,  கையில் வாட்ச் என வேறு எதையும் அவரது உடலில் அணிகலனாக நாம் பார்க்க முடியாது.

அப்படிப்பட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்துமதிப்பு தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. இவர் நடித்த 167 படங்களில் 100 திரைப்படங்கள் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் ஆகும் அதில் முக்கியமாக 18 திரைப்படங்கள் உலகம் முழுக்க வியந்து பார்க்க வைத்த சாதனை திரைப்படங்கள் எனலாம்.

Also Read : அடுத்தடுத்து வரவிருக்கும் கமலின் 6 படங்கள்.. ரஜினியின் மார்க்கெட்டை உடைக்க தரமான 6 இயக்குனர்களுடன் கூட்டணி

தற்போது ரஜினிகாந்த் 85 கோடி வரை சம்பளமாக வாங்கிக் கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த் திரை வாழ்க்கையில் வந்த போதே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காரையே அவர் முதன்முறையாக வாங்கினார்.தற்போது நான்கு வெளிநாட்டு கார்கள் அவரிடம் உள்ளது. அந்த கார்களின் ஒட்டு மொத்த மதிப்பு 47 கோடியாம்.

அதுமட்டுமில்லாமல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் மதிப்பு, தற்போதைய நிலவரப்படி 35 கோடியாகும். மேலும் 2022 இந்த ஆண்டின் படி ரஜினிகாந்திற்கு 400 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் அவரிடம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவோ சொத்து விவரங்கள் ரஜினிகாந்திடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்கும் ரஜினி, கமல் படங்கள்.. மீண்டும் மோதிக் கொள்ளும் உலக நாயகன், சூப்பர் ஸ்டார்

Trending News