சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

8 வருடங்களுக்கு முன் பிரபல நடிகருக்கு நடந்த கொடூரம்.. பிஎஸ்பிபி பள்ளியில் நடந்த மேலும் ஒரு சம்பவம்!

பத்மா சேஷாத்ரி பள்ளியில் நடந்த பா**யல் ரீதியான தொந்தரவுகளை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதில் பிடிபட்ட ஆசிரியர் தன்னைப்போல் மூன்று ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதையும் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மற்றொருபுறம் இதற்கு முன்னதாக 2013-ல் நடந்த கொடூரமான ஒரு சம்பவத்தை வெளிக்கொண்டு வந்துள்ளனர் பிரபல பத்திரிக்கையாளர் நக்கீரன்.

பாலியல் ரீதியான தொந்தரவுகள் மட்டுமில்லாமல், உயிர் விட்ட மாணவர்களும் இருக்கின்றனர். பிரபல நடிகர் மனோகரின் மகன் நீச்சல் குளத்தில் மூச்சு திணறி இறந்து போன சம்பவத்தை பள்ளி நிர்வாகம் அப்படியே மூடி மறைத்து விட்டதாம்.

அந்த மாணவனின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அலைக்கழிக்கப்பட்டு இறுதியாக சோர்வடையும் நேரத்தில் உங்கள் பையன் இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு உருக்குலைந்து போனார் மனோகர். இந்த கதையை தான் சமுத்திரக்கனி ஒரு படத்தில் உண்மை சம்பவமாக எடித்து இருப்பர்.

காவல்துறையில் வழக்கு பதிவு செய்தும், எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை என்பது தான் பெரும் சோகம். அப்போதைய அரசு கண்டுகொள்ளவில்லை, இதற்கான எந்த ஒரு சட்டரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

manohar-actor
manohar-actor

40 குழந்தைகள் விளையாடும் நீச்சல் குளத்தில் அளவுக்கு அதிகமாக கிட்டத்தட்ட 120 குழந்தைகள் விளையாடி இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இப்படி மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களை சமூக ஆர்வலர்கள் தூசி தட்டி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.

முழு வீடியோ பார்க்க: Click Here

Trending News