வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எழிலிடம் நேரடியாக மோதும் சைக்கோ.. கோர்ட்டையை அலறவிட்ட பாக்யாவின் மாமி, ஒன்று சேர போகும் மருமகள்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், சீரியஸான விஷயத்தில் ஒரு நகைச்சுவை வைத்தால் எந்த அளவிற்கு மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு அதன்படி கதை நகர்கிறது. அதாவது செழியனுக்கும் ஜெனிக்கும் விவாகரத்து வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஜெனி அப்பா ரொம்பவே மெனக்கெடு செய்து வருகிறார்.

அதன் வாயிலாக விவாகரத்து நோட்டீசை செழியனுக்கு அனுப்பி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் வந்துவிட்டது. அதனால் கோர்ட்டுக்கு பாக்யா, கோபி, பாக்யாவின் மாமியார் மற்றும் செழியன் வருகிறார்கள். அதே மாதிரி அங்கு இருந்து ஜெனியும் அவருடைய அப்பாவும் வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து கோர்ட்டில் இவர்களுடைய விவாகரத்து பஞ்சாயத்து நடைபெறும் பொழுது அங்கே இருக்கும் லாயர் மற்றும் ஜட்ஜை பேசவிடாமல் இடையில் புகுந்து வாய்க்கா தகராறு பிரச்சினையை ஆரம்பித்து விட்டார் பாக்யாவின் மாமியார். இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்பதற்கேற்ப பாட்டியின் பேச்சு ரொம்பவே நகைச்சுவையாகும் ரசிக்கும்படியாக இருந்தது.

Also read: ரெண்டு பொண்டாட்டி ரெண்டு புருஷன் கதையில் பாக்கியலட்சுமி.. மருமகள் எடுக்கப் போகும் முடிவு என்ன

அத்துடன் பாட்டி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கோர்ட்டையை அலற விட்டுவிட்டது. இதற்கிடையில் ஒவ்வொரு விஷயத்திற்கும் கோபி கொடுக்கும் ரியாக்ஷன் தான் அல்டிமேட் ஆக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து கோபி தன்னுடைய அம்மா தொடர்ந்து இங்கே இருந்தால் பிரச்சனையாகிவிடும் என்று வெளியே கூட்டி போய்விடுகிறார்.

அடுத்து ஜெனிக்கும் செழியனுக்கும் உள்ள விவாகரத்துக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கேப்புல எப்படியாவது ஜெனி மனசை மாற்றி விட வேண்டும் என்று செழியன் போராடி வருகிறார். அந்த வகையில் கண்டிப்பாக ஜெனி இவருக்கு விவாகரத்து கொடுக்க மாட்டார் இவர்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் கூடிய விரைவில் வந்துவிடும்.

அடுத்தபடியாக எழிலிடம் வேண்டுமென்றே வம்புக்கு வருகிறார் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ். இதுவரை இதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த எழில், கணேசனின் நடவடிக்கைகள் அனைத்தும் சைக்கோ மாதிரி இருப்பதால் இனிமேலும் இவரிடம் அமைதியாக இருப்பது நியாயமே இல்லை என்று முடிவெடுத்து விட்டார். அந்த வகையில் சைக்கோவிடம் எதிர்த்து சவால் விடும் அளவிற்கு எழில் துணிந்து விட்டார்.

Also read: சைடு கேப்பில் மகனுக்கு தோள் கொடுக்கும் பூமர் அங்கிள்.. பாக்யாவை ஓவர் டேக் செய்யும் கோபி

Trending News