Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ராதிகா மயூவை ஸ்கூலுக்கு கிளப்பிக் கொண்டிருக்கிறார். அங்கு வந்த கோபி, மயூவை நான் கொண்டு ஸ்கூலில் விடுகிறேன் என்று சொல்கிறார். அதற்கு ராதிகா அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மயூவை பஸ் வெளில காத்துக் கொண்டிருக்கும் நீ போ என்று சொல்கிறார்.
உடனே கோபி, ராதிகாவிடம் என் மகள் மயூ மீது எனக்கு பாசம் இல்லையா? நான் கூட்டு போயிட்டு வரக்கூடாதா, அந்த உரிமை கூட இல்லையா என்று கேட்கிறார். அதற்கு இப்பொழுது தான் உங்களுக்கு எங்க ஞாபகம் வருகிறதா? குழந்தை கருவிலேயே போயிட்டு என்று நான் எப்படி வருத்தப்பட்டேன். அப்பொழுது கூட நீங்கள் எனக்கு ஆறுதலாக இல்லை. அதன் பின் உடம்பு எப்படி இருக்கிறது சரியாக சாப்பிடுகிறாயா? மருந்து சாப்பிடுகிறாயா என்று கூட அக்கறையை காட்டவில்லை.
சண்டை சச்சரவுமாக இருக்கும் ராதிகா கோபி
இப்ப மட்டும் திடீர்னு என்ன உங்களுக்கு எங்க மீது பாசம் வந்துவிட்டது. உங்களை கல்யாணம் பண்ணினால் நானும் மயூவும் சந்தோஷமாக இருப்போம். நம்ம குடும்பமாக ஒற்றுமையாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் உங்களை கல்யாணம் பண்ண பிறகு தான் எங்களுக்கு நிம்மதியே இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு நாளும் ஏதாவது பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது.
உங்களைப் பார்த்து பழகினதே தப்பு என்று ராதிகா, கோபியுடன் கோபப்பட்டு பேசுகிறார். இதுவரை பொறுத்திருந்த கோபி இனிமேலும் சும்மா இருக்க முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப நான் உன்னை எப்போ கல்யாணம் பண்ணினேனோ, அப்பொழுதே என்னுடைய நிம்மதி குடும்பம் எல்லாம் என்னை விட்டு போகிவிட்டது. உனக்காக என் அப்பா அம்மா பிள்ளைகள் எல்லாத்தையும் விட்டுவிட்டு உன் பின்னால் வந்தேன்.
ஆனால் நீ எனக்கு கொடுத்தது என்ன அவமானமும் சங்கடத்தையும் தான். உன்னால எங்கம்மா ஜெயிலுக்கு போகும் அளவிற்கு உங்க அம்மா கூட சேர்ந்து சதி பண்ணி விட்டாய். எல்லாத்தையும் மறந்து உன்னிடம் பேசுகிறேன், அதற்கு நீ என்னெல்லாமோ பேசி என்னை நோகடிக்கிறாய் என்று கோபி, ராதிகாவிடம் சண்டை போடுகிறார்.
உடனே ராதிகா என்னால தான் உங்களுக்கு நிம்மதி இல்லை என்றால் நான் விவாகரத்து கொடுக்கிறேன். தயவுசெய்து நாம் பிரிந்து கொள்ளலாம் என்று ஒரு வார்த்தை சொல்கிறார். இந்த வார்த்தை கேட்டதும் கோபி, என்ன சொல்கிறாய் நம்ம பேசி சமாதானப்படுத்தி விடலாம் என்று உன் கூட பேச வந்தா, நீ என்ன விவாகரத்து பண்ணப் போகிறாய் என்று சொல்கிறாய்.
இப்படியெல்லாம் பேச உனக்கு எப்படி மனசு வருது என்று பயத்தினால் அப்படியே கோபி அந்தர்பல்டி அடித்து வழக்கம்போல் காமெடி பீஸ் ஆக அங்கிருந்து கிளம்பி விடுகிறார். பிறகு வெளியில் வந்த கோபி, கார் பக்கத்தில் நின்று புலம்பிக் கொண்டு கார் துடைத்துக் கொண்டிருக்கிறார். அங்கு இருந்து பாக்யா வீட்டை பார்க்கிறார்.
அங்கே ஜெனி, செழியன், தாத்தா, பாட்டி, பாக்கியா அனைவரும் சேர்ந்து அமிர்தாவின் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி அவர்கள் சந்தோசமாக இருக்கும் தருணத்தை பார்த்து கோபி வயிற்றுஎரிச்சல் படுகிறார். அதுமட்டுமில்லாமல் பாக்கியா சந்தோசமாக சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்து என்னை இப்படி புலம்பவிட்டு குடும்பத்தை விட்டு தனியாக நிக்க வைத்து விட்டு நீ சந்தோஷமாக இருக்கிறாயா?
உன்னை நான் சந்தோஷமாக இருக்க விட மாட்டேன் என்று சைக்கோதனமாக புலம்பிக்கொள்கிறார். இப்படியே போனால் கூடிய சீக்கிரத்தில் கோபி முழு பைத்தியக்காரராக ஆகி விடுவார். இதனை தொடர்ந்து கோபி ரெஸ்டாரண்டுக்கு போகிறார். அங்கே வேலை பார்ப்பவர்களிடம் கோபப்பட்டு அனைவரையும் திட்டி டென்ஷன் ஆகவே இருக்கிறார். இவரை கூல் படுத்தும் விதமாக கோபியின் நண்பர் வந்து சமாதானப்படுத்துகிறார்.
அடுத்ததாக பழனிச்சாமி மற்றும் பாக்யா சந்தித்துக் கொண்டு பேசுகிறார்கள். அப்பொழுது இனியா, வீட்டில் லெட்டர் எழுதி வைத்து வீட்டை விட்டு போக நினைத்த காரியத்தை பற்றி பழனிச்சாமிடம் சொல்லி புலம்புகிறார். அதற்கு வழக்கம் போல் பாக்யாவுக்கு ஆறுதல் படுத்தும் விதமாக பழனிச்சாமி பேசுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- லெட்டர் எழுதி வைத்த இனியா, எடுத்த விபரீதம்
- ராதிகா கொடுத்த சவுக்கடியால் பாக்கியா உடன் சேர நினைக்கும் கோபி
- கோபி கொடுத்த சப்போர்ட்டில் பாக்கியாவை அலட்சியப்படுத்திய இனியா