புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாக்கியாவை சிக்கவைத்து குளிர்காயும் சைக்கோ.. கோபியின் முகத்திரையை கிழிக்க போகும் செழியன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை கல்யாணம் பண்ணியது தவிர பாக்யா எந்த தவறுமே பண்ணவில்லை. ஆனால் ஒவ்வொரு தண்டனையும் பாக்யா அனுபவிக்கும் விதமாகத்தான் கோபி பிரச்சனை செய்து வருகிறார். இப்பொழுது கூட, பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்பதற்கு ஏற்ப தாத்தா இறந்த வீட்டிற்குள் ஈஸ்வரி எடுத்த முடிவால் கோபி அவமானப்பட்டது என்னமோ உண்மைதான்.

ஆனால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் ஈஸ்வரி எடுத்த முடிவு தான். இது தெரிந்தும் கோபி இதற்கும் காரணம் பாக்யா தான் என்று மொத்த வன்மத்தையும் பாக்யா மீது காட்ட வேண்டும் என்பதற்காக பாக்யாவின் கேரியரை க்ளோஸ் பண்ணுவதற்கு தயாராகி விட்டார். அந்த வகையில் ஆனந்த் என்பவரை பாக்யா ஹோட்டலுக்கு அனுப்பி வைத்து பாக்கியா செய்த சமையலில் கலப்படத்தை செய்ய வைத்து விட்டார்.

பாக்கியாவிடம் உண்மையே சொல்லப்போகும் செழியன்

இதனால் பாக்கியா ஹோட்டலில் வாங்கிய சாப்பாட்டை சாப்பிட்ட பொதுமக்கள் உடல் ரீதியாக பாதித்ததால் பாக்கியா ஹோட்டலுக்கு நேரடியாக வந்து பிரச்சனை செய்யும் விதமாக ரகளை பண்ணி விட்டார்கள். பாக்கியா நம் மீது எந்த தவறும் இல்லையே, இன்னைக்கி வாங்கிய பொருட்களை வைத்துதானே சமைத்துக் கொடுத்தோம். அது எப்படி கெட்டுப் போகும் என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

ஆனாலும் பிரச்சினை செய்த மக்களிடம் பாக்யா எடுத்துச் சொல்ல வரும் பொழுது யாரும் காது கொடுத்து கேட்கவில்லை. பிறகு இந்த விஷயம் அனைவருக்கும் தெரிந்த நிலையில் வீட்டிற்குள் இருந்து ஈஸ்வரி நான் துவங்கி வைத்ததால் தான் இவ்வளவு பிரச்சினை நடந்திருக்கிறது என்று ஜெனி மற்றும் இனியாவிடம் புலம்புகிறார்.

இதனை அடுத்து எழில், அமிர்தா, செழியன் அனைவரும் அம்மாவை பார்ப்பதற்காக ஹோட்டலுக்கு போய் விடுகிறார்கள். அத்துடன் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பழனிச்சாமியும் ஹோட்டலுக்கு போய் போலீஸ்க்கு போன் பண்ணி மக்கள் பிரச்சனை பண்ணுவதை தெரிவித்து விடுகிறார். பிறகு போலீஸ் வந்து மக்களிடம் பேசிய நிலையில் பாக்யா உங்களுக்கு இழப்பீடு செய்யும் விதமாக வாங்கின காசை கொடுத்து ட்ரீட்மென்ட்க்கும் பணத்தை தருகிறேன் என்று சொல்கிறார்.

பிறகு ஒரு வழியாக மக்கள் சண்டை போட்டுவிட்டு திரும்பி விடுகிறார்கள். ஆனாலும் பாக்யா ஹோட்டலில் ஏற்பட்ட பிரச்சனையால் 50 ஆயிரம் ரூபாய் அபதாரமும் செலுத்த வேண்டும். ஹோட்டலையும் சீல் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து ஹோட்டலை க்ளோஸ் பண்ணி விடுகிறார்கள். இதெல்லாம் வெளியில் இருந்து பார்த்த கோபி இது தேவை தான்.

இதோடு உனக்கு போதாது இன்னும் நீ அனுபவிக்கனும் என்று சைக்கோ தனமாக பாக்கியா படும் கஷ்டத்தை பார்த்து அணுஅணுவாக ரசித்துப் பார்க்கிறார். இந்த சூழ்நிலையில் அங்கே கோபியின் ஆளாக வேலை பார்த்த ஆனந்த் இதுதான் சான்ஸ் என்று வீட்டில் இருந்து கால் பண்ணுகிறார்கள். நான் போய் விடுகிறேன் என்று எஸ்கேப் ஆகி விடுகிறார்.

அப்பொழுது தான் செழியனுக்கு இந்த ஆனந்த் மீது சந்தேகம் வரப்போகிறது. ஏனென்றால் ஏற்கனவே கோபியின் ஹோட்டலுக்கு போகும் பொழுது இந்த ஆனந்தை செழியன் பார்த்திருக்கிறார். அந்த வகையில் இந்த ஆனந்த் அப்பா ஹோட்டலில் வேலை பார்த்த நபர் தான் என்று யோசிப்பார். இவர் ஏன் இங்கே வேலை பார்க்க வேண்டும் என்று யோசித்த நிலையில் நடந்த விஷயத்தை பாக்கியவிடம் சொல்ல வாய்ப்பு இருக்கிறது.

அதன் பிறகு நடந்த உண்மைகளை பாக்கியா மற்றும் எழில் கண்டுபிடித்து கோபியின் முகத்திரையை கிழிப்பதற்கு செழியன் உதவியாக இருப்பார். ஆனால் கோபியின் சுயநலத்திற்காக பொதுமக்களை பகடைக்காயாக பயன்படுத்தியதால் நிச்சயம் இதற்கான தண்டனையை அனுபவிக்கும் விதமாக கோபி ஜெயிலுக்குப் போக வாய்ப்பு இருக்கிறது.

Trending News