ஆபாசமான பேச்சு பப்ஜி விளையாட்டின் மூலம் பல லட்சம் சப்ஸ்கிரைப்ரை கொண்டிருந்த மதனை இன்று காவல்துறையினர் அதிரேடியாக கைது செய்துள்ளனர்.
3 சொகுசு கார்கள், 2 பங்களா வீடுகள் என்று செட்டிலாகி இருந்த மதனை. ஆபாசமான வார்த்தைகளில் வீடியோ வெளியிடுவதால் குழந்தைகளுக்கு ஆபத்து என்று 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வுத்துறை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் இவர் இருக்கும் இடத்தை வலைவீசி தேடும் போது போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துள்ளார் மதன். காவல்துறை நெருங்க முடியாமல் தவித்து வந்தனர்.
VPN மூலம் ஐபி அட்ரஸ்-ஐ கண்டுபிடிக்காத அளவிற்கு மதன் தனது ஆட்டத்தை நடத்தியுள்ளார். இதனால் மதனின் மனைவி கிருத்திகா மற்றும் தந்தை மாணிக்கம் ஆகியோரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பிய மதன் தர்மபுரியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து ரகசியமாக அந்த வீட்டை நோட்டமிட்ட காவல்துறையினர் அங்கு பதுங்கி இருப்பதை உறுதி செய்து அதிரடியாக கைது செய்ய உள்ளே சென்றுள்ளனர்.
போலீசாரை பார்த்து நடுங்கி போய் மதன் காலில் விழுந்து விட்டாராம். இன்று விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். மதனுக்காக வாதாடிய வழக்கறிஞரை ஆபாசமான வார்த்தைகள் பேசிய வீடியோவை பார்க்குமாறு நீதிபதி கூறியது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு கேவலமான செயலில் ஈடுபட்டவருக்கு கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை. இதைத்தவிர இன்னும் ஷாக்கான சம்பவம் என்னவென்றால் இதே போன்று 3 யூடியூப் சேனலுக்கு அவரது மனைவி அட்மினாக உள்ளார்.
அவரது அக்கவுண்டை சோதனை செய்த போது 4 கோடி வரை பணம் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.