
Nayanthara: பட்ட காலிலேயே படும் கேட்ட குடியே கெடும் என்று சொல்வார்கள். அப்படி ஒரு விஷயம் தான் விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதியினருக்கு நடந்து கொண்டிருக்கிறது.
சமீப காலமாக இவர்கள் எது செய்தாலும் அதை ட்ரோல் செய்வது என்பது நடந்து கொண்டிருக்கிறது. அப்படிதான் விக்னேஷ் சிவன் புதுச்சேரி முதலமைச்சரை சந்தித்து பேசிய போதும் நடந்தது.
வசமாய் சிக்கிய விக்கி
அரசுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்க தான் விக்னேஷ் சிவன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது.
இதை விக்னேஷ் சிவன் தரப்பு மறுப்பு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று புதுச்சேரி சட்டமன்றத்தில் இதுகுறித்த விவாதமே நடந்து இருக்கிறது.
தனி நபர் ஒருவர் எப்படி அரசாங்க சொத்தை விலைக்கு கேட்க முடியும் என்று விக்னேஷ் சிவனை சுட்டிக்காட்டி விவாதம் நடந்து, அரசாங்க சொத்தை அப்படியெல்லாம் யாரும் விலைக்கு வாங்க முடியாது என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
எந்த அரசு சொத்தையும் விலைக்கு வாங்க போகவில்லை, படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க தான் போயிருந்தேன் என விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்திருந்த நிலையில் மொத்த குட்டும் வெளியாகி இருக்கிறது.