வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

விஜய் சேதுபதியை விட பளிச்சென மாறிய புகழின் புகைப்படம்.. ஒருவேளை ஹீரோவா டிரை பண்றாரு போல

விஜய் டிவி கலக்கப்போவது யாரு சீசன்5ல் லேடி கெட்டப் போட்டதன் மூலம் பிரபலமான புகழ், அதன் பிறகு கலக்கப்போவது யாரு சீசன்6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். அதில் எலிமினேட் ஆன புகழ், மீண்டும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் 2ல் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

அதில் கோமாளியாக செய்த லூட்டி, சேட்டை மற்றும் காமெடி கவுண்டர்கள் எல்லாம் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதன்பிறகு புகழுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உருவாகும் அளவுக்கு வளர்ந்தார். பின்பு காமெடி ராஜா கலக்கல் ராணி ஷோவில் பங்கேற்ற புகழுக்கு சினிமா வாய்ப்புகள் வரத் துவங்கியது.

இந்நிலையில் அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் என்ற படத்திலும் சந்தானம் உடைய சபாபதி படத்திலும் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டினார்.

அத்துடன் அருண் விஜய்யின் படத்திலும் விஜய் சேதுபதியின் படத்திலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் புகழ், அஜித் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் வலிமை படத்திலும் ஒரு ரோல் நடித்திருக்கிறார்.

puzhl-vjs-cinemapettai
pugazh-vjs-cinemapettai

இவ்வாறு சினிமாவில் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி கொண்டிருக்கும் புகழ் விஜய் சேதுபதியுடன் குரூப் போட்டோ ஒன்று இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் விஜய் சேதுபதி உடன் புகழ் உள்ளிட்ட நான்கு பேர் உள்ளனர்.

இதில் விஜய் சேதுபதியை விட புகழ் பளபளவென இருப்பதால் ஒருவேளை ஹீரோவாக ரெடியாகி விட்டார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர். காமெடியன்கள் ஹீரோவாக அது புதிதல்ல. யோகி பாபு, சந்தானம் இவர்களது வரிசையில் புகழ் மிக விரைவில் கதாநாயகனாக நடித்து விடுவார் என்று ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Trending News