திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

யோகி பாபுவுக்கு போட்டியாக களம் இறங்கிய புகழ்.. ஹாலிவுட் பட ஸ்டைலில் வெளிவந்த போஸ்டர்

Actor Yogibabu: ஆரம்பத்தில் சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்த யோகி பாபு இப்போது முன்னணி காமெடியன் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். இவர் இல்லாமல் எந்த படமும் கிடையாது என்னும் அளவுக்கு இவர் பிஸியாக மாறி இருக்கிறார். தற்போது இவருக்கு போட்டியாக விஜய் டிவி புகழ் களம் இறங்கியுள்ளார்.

அதாவது யோகி பாபு போன்றே புகழும் இப்போது கதையின் நாயகனாக மாறி இருக்கிறார். கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த இவர் சினிமாவில் காமெடியனாக தான் களமிறங்கினார். ஆனால் இப்போது MR.ZOO KEEPER என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

Also read: ஜெட் வட்டி போல் சம்பளத்தை ஏத்தும் யோகி பாபு.. 8 மணி நேரத்திற்கு மேல வாங்கும் மின்னல் வட்டி

யுவன் சங்கர் ராஜா இசையில் சுரேஷ் இயக்கும் இப்படத்தில் டிக்கிலோனா படத்தில் நடித்த ஷிரின் நாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே இப்படம் தொடங்கப்படும் போது படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தது. அதை தொடர்ந்து தற்போது புகழ் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மற்றொரு போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமின்றி நிஜ புலியுடன் இப்படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரும் அனுபவமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். படத்தின் பெயரை பார்க்கும் போதே படம் விலங்குகள் சம்பந்தப்பட்டது என தெரிகிறது. அதை தொடர்ந்து போஸ்டரிலும் புகழ் புலியுடன் இருப்பது போன்று இருக்கிறது.

Also read: 2023ல் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்த 3 காமெடி நடிகர்கள்.. உணர்ச்சிப் பூர்வமான நடிப்பை வெளிக்காட்டிய யோகி பாபு

இதனாலேயே படத்தைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் இப்படம் ஹாலிவுட் படமான ZOO KEEPER படத்தை தழுவி தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புகழ் ஹீரோவாக அறிமுகமாகவும் முதல் படமே மிகப்பெரும் வெற்றி படத்தின் சாயலாக இருக்கிறது.

மேலும் கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கும் புகழ் அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் இவர் யோகி பாபுவின் இடத்தை விரைவில் தட்டி செல்வார் என்று பலரும் புகழாரம் சூடி வருகின்றனர்.

ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள புகழ்

pugazh-vijay-tv
pugazh-vijay-tv

Trending News