வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

விஜய்யை வைத்து ஒரு கிராமத்தையே படிக்க வைத்த புண்ணியவான்.. ஆச்சரியப்பட்டு புல்லரித்து போன தளபதி

Vijay: சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகர்கள் உச்சத்தை தொட்டு பிரபலமாக இருந்தாலும், அவர்களுக்கு மத்தியில் எப்போதுமே தனி இடத்தில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவருக்கு எல்லா இடத்திலும் பேரும், புகழும் இருக்கிறது. அத்துடன் இவருடைய நடிப்பை ரசித்துப் பார்க்கும் அளவிற்கு மக்கள் இவரை தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

அப்படித்தான் ஒரு கிராமமே இவருடைய படங்களை பொக்கிஷமாக பார்த்து வருகிறார்கள். அதாவது கேரளாவில் உள்ள ஒரு மலை கிராமத்தில் உள்ளவர்களுக்கு விஜய் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். அப்படிப்பட்ட அவர்களுக்கு படிப்பறிவு கொஞ்சம் கூட இல்லை. இன்னும் சொல்ல போனால் எப்படி டாய்லெட்டை யூஸ் பண்ண வேண்டும் என்பது கூட தெரியாத அளவிற்கு பாமர மக்களாக இருக்கிறார்கள்.

Also read: விடாமுயற்சியில் நடிக்கும் விஜய்யின் அப்பா.. வெளிவந்த புகைப்படத்தின் காரணம் இதுதான்

இவர்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு என்னவென்றால் விஜய் படங்களையும், பாடல்களையும் பார்த்து ரசிப்பது தான். ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் கூட தமிழ் தெரியாது. இருந்தாலும் விஜய் படம் என்றால் அவ்வளவு மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் இருந்து பார்த்து வருவார்கள். இதைக் கேள்விப்பட்ட அங்குள்ள கலெக்டர் உமேஷ் கேசவன் அந்த கிராமத்தில் இருக்கும் மக்களை படிக்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

அந்த வகையில் அந்த கிராமத்து மக்களிடம் நேரடியாக சென்று நீங்கள் எல்லோரும் பள்ளிக்கூடம் சென்று படிப்பு அறிவை கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு எப்பொழுதுமே கை கொடுக்கும் என்று கூறியிருக்கிறார். அத்துடன் நீங்கள் அனைவரும் நல்லபடியாக படித்தால் உங்களுக்கு பிடித்தமான விஜய்யை சந்திக்கும் வாய்ப்பை நான் ஏற்படுத்திக் கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Also read: அப்பாவை சந்தித்த போது விஜய் போட்ட முக்கிய கட்டளை.. உங்க சங்கார்த்தமே வேண்டாம் என எஸ்ஏசி எடுத்த முடிவு

உடனே அவர்களும் விஜய்யை நேரில் பார்க்கும் வாய்ப்பு வருகிறது என்ற சந்தோஷத்தில் அந்த கலெக்டர் சொன்னது அனைத்தையும் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். அடுத்தபடியாக அந்த கலெக்டரும் விஜய்யை நேரில் சந்தித்து, இங்கு நடந்த அத்தனை விஷயங்களையும் கூறி இருக்கிறார். இதை கேள்விப்பட்டதும் விஜய் ரொம்பவே ஆச்சரியப்பட்டு மெய்சிலிர்த்து போய் நின்றிருக்கிறார்.

உடனே விஜய், நீங்கள் எப்பொழுது கூப்பிட்டாலும் நான் அந்த கிராமத்து மக்களை சந்திக்க தயாராக இருக்கிறேன். அதனால் இந்த மாதிரி நல்ல விஷயத்தை தொடர்ந்து செய்யுங்கள் என்று பாராட்டி இருக்கிறார். பொதுவாக சினிமாவை பார்த்தால் நன்றாக படிக்க முடியாதுன்னு சொல்லுவாங்க, ஆனா இந்த கலெக்டர் விஜய்யை வைத்து ஒரு கிராமத்து மக்களை படிக்க வைப்பதில் முயற்சி எடுத்து வருகிறார்.

Also read: சிவகார்த்திகேயனுடன் முருகதாஸுக்கு இப்படி ஒரு பந்தமா? விஜய் மறுத்தும் தூக்கிவிட இதுதான் காரணம்

- Advertisement -spot_img

Trending News