ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

புதிய சாதனை! புஷ்பா-2 உண்மையிலே Fire தான் போல, அடிச்சு நொறுக்கும் அட்வான்ஸ் புக்கிங்

இந்த வாரம் Dec 05 தேதி அதிக எதிர்பார்ப்புடன் வெளிவர உள்ளது புஷ்பா 2. ட்ரைலரை பார்த்தவுடன் எப்படா இந்த படம் வெளிவரும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பல சாதனைகளை முறியடித்துள்ளது.

அந்த வகையில் தற்போது புஷ்பா 2 உலகளவில் அட்வான்ஸ் புக்கிங்கில் கிட்டத்தட்ட 100 கோடி தாண்டி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்தியளவில் இதுபோன்ற சாதனை எந்த படமும் செய்ததில்லை என்பதுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் புக் செய்துள்ளனர்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் அசால்டாக 500 கோடியை தாண்டி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுன் ரசிகர்களைத் தாண்டி எல்லா ரசிகர்களுக்கும் முழு என்டர்டைன்மென்ட் கண்டிப்பாக இருக்கும்.

படம் வெளி வருவதற்கு முன்னரே இதுபோன்ற வசூல் இந்திய சினிமாவை உச்சத்திற்கு எடுத்துட்டு போகும் என்பதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

pushpa-2-pre-booking
pushpa-2-pre-booking

Trending News