புஷ்பா 2 படம் வெளியான நாள் முதல் சக்கைபோடு போடுகிறது. என்ன தான் தமிழ் நாட்டில் தியேட்டர்களில் ஈ ஆடினாலும், மற்ற மாநிலங்களில் வசூல் வேட்டை நடந்து வருகிறது.
அதுவும் வடமாநிலங்களில் டிக்கெட்டுக்காக சண்டை போடுகிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில், டிக்கெட்-க்காக அடித்துக்கொள்ளும் காட்சியை பார்க்கும்போது, அப்படி என்ன படத்தில் உள்ளது என்ற ஆர்வம் வருகிறது.
முதல் நாளே, உலகம் முழுவதும் 164 கோடியை வசூல் செய்து 2வது நாளில் 93.8 கோடியை கலெக்ட் செய்தது.
3வது நாளில் 119 கொடியும், 4-வது நாளில் 141 கோடி வசூல் வேட்டை நடத்தியது. மேலும் நேற்றைய தினம் மட்டும், 64 கோடி வசூலை குவித்து உள்ளது புஷ்பா.
இதுவரை பாகுபலி-RRR போன்ற படங்கள் கூட செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளது.
அமெரிக்காவில் புஷ்பா 2 வசூல் என்ன தெரியுமா?
ஆனால் என்ன தான் மற்ற மாநில மக்கள் படத்தை கொண்டாடினாலும், தமிழில் பெரிதாக மக்களுக்கு பிடிக்கவில்லை. காரணம், இது ஒரு high budget bhojpuri படம் போல தான் உள்ளது.
சம்மந்தம் இல்லாமல் தாவி தாவி அடிக்கும் காட்சிகளில் குரங்கு கூட தோற்றுப்போய்விடும் என்ற அளவுக்கு இருக்கிறது.
லாஜிக் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த படத்தை பார்த்தல், ‘இன்னுமாடா இந்த மாவு புளிச்சு போகல..’ என்று தான் தோன்றும்.
மேலும் இந்த படத்தை பார்க்க வரும் ஒரு சில இளைஞர்கள், rashmika நடித்திருக்கும் சில அந்தரங்க காட்சிகள், மற்றும், ஸ்ரீ லீலா போடும் ஆட்டத்தை பார்க்க தான் வருகிறார்கள்.
மற்ற படி, இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு Glamour உள்ளது. எப்படி இந்த படத்துக்கு U/A கொடுத்தார்கள் என்று மட்டும் புரியவில்லை.
ஆனால் இன்றைய காலகட்டத்தில், வசூல் தானே ஒரு படத்தின் வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. அப்படி பார்த்தால் இந்த படம் மாபெரும் வெற்றி தான்.
இதுவரை 922 கோடி மொத்தமாக வசூல் செய்துள்ளது. இந்த படம் வட மாநிலங்களில் மட்டும், 450 கோடிக்கு மேல் இதுவரை வசூல்வேட்டை நடத்தியுள்ளது.
மேலும் அமெரிக்காவில் மட்டும் 10 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. அதை இந்திய ரூபாய் கணக்கில் பார்த்தால், தோராயமாக 82 கோடி. இது மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
போற போக்கை பார்த்தால், 2000 கோடி வசூல் confirm போல..