வரும் டிசம்பர் 5-ஆம் தேதி, இந்த வருடத்தின் கடைசி பிரம்மாண்ட பட்ஜெட் படமான புஷ்பா 2 படம் வெளியாகிறது. இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் உள்ளன. பல பஞ்சாயத்துக்கு நடுவில் இந்த படத்தை ஒரு வழியாக டிசம்பர் 5-ஆம் தேதி ரிலீஸ் செய்கிறார்கள்.
இந்த படத்தின் ப்ரோமோஷன் ஒருபுறம் நடந்து வர, மறுபுறம் படத்தின் போஸ்ட் ப்ரோடக்க்ஷன் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. இந்த படத்தின் எடிட்டிங் வேலைகள் இன்னும் முடிந்த பாடில்லை. இப்படி பட்ட சூழ்நிலையில், படத்தின் எடிட்டரை வேறு நீக்கிவிட்டார் படத்தின் இயக்குனர்.
இது என்னடா பகல் கொள்ளையா இருக்கு
சூழ்நிலை இப்படி இருக்க, இப்படத்திற்கான தெலங்கானா மாநிலத்திற்கான கட்டண தொகைக்கான அரசாணையை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 4-ஆம் தேதிக்கான பிரிமியர் ஷோ-காண டிக்கெட் விலையை அறிவித்துள்ளது. அந்த டிக்கெட் விலையை கேட்டு ரசிகர்கள் ஆடிப்போய்விட்டனர். மேலும் இது என்னடா பகல் கொல்லையா இருக்கு என்று உச்சுக்கொட்டி வருகின்றனர்.
படம் வெளியாகும் தேதியான 5-ஆம் தேதி 4 மணி சிறப்பு கட்சிக்கான அனுமதியை வழங்கியுள்ளது அம்மாநிலம். அன்றைய டிக்கெட் விலை, எப்போதும் உள்ள விலை தான். ஆனால் பிரிமியர் காட்சிக்கு 800 ரூபாய் டிக்கெட் விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை கேட்ட நடுத்தர மக்கள் கொந்தளித்துள்ளனர்.
மனசாட்சி இல்லாமல் கொள்ளை அடிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். படத்துக்கு ஓவர் பில்ட் அப் வேறு கொடுக்கிறார்கள்.. இந்த வருடம், இப்படி பயங்கர எதிர்பார்ப்புகளோடு வெளியான எல்லா படங்களும் புஷ்வாணமாக் தான் போயிருக்கிறது. இதுவும் அப்படி ஆகாமல் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் தற்போது கடவுளை பிரார்த்தித்து வருகின்றனர்.