திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

புஷ்பா-2 இவ்வளவு Length-ஆ.? பாத்து கடைசில இந்தியன் 2 மாதிரி Fire ஆயிடாம!

இந்த வருடம் கடைசியாக வெளியாகும் அதிக பட்ஜெட் படம் என்றால் அது புஷ்பா 2 தான். இந்த படத்துக்கு தற்போது தீவிரமாக ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பும் உள்ளது. சமீபத்தில் வெளியான கிஸ்ஸிக் பாடல் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

ஒரு புறம் DSP இந்த படத்திலிருந்து நீக்கியது, படத்தின் இயக்குனருக்கும் அல்லு அர்ஜூனுக்கும் சண்டை என்று ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் போய்க்கொண்டு இருந்தாலும், இந்த படம் நிச்சயம் நல்ல கன்டென்ட் படமாக இருக்கும், அதே நேரத்தில் commercial ஆகவும் ஹிட் அடிக்கும் விதமாக எடுத்துள்ளனர்.

இவ்வளவு Length-ஆ?

இந்த நிலையில் தற்போது, இந்த படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது, இந்த படம் 3 மணி நேரம், 21 நிமிடம் ஓடும் என்று கூறப்படுகிறது. அதிக லென்த்துள்ள ஒரு படமாக தற்போது புஷ்பா 2 உருவெடுத்துள்ளது.

ஏற்கனவே இந்த வருடம் வெளியான கல்கி 2898 எ.டி படம், இந்த வருடம் வெளியானதில், அதிக நீளம் கொண்ட படமாக இருந்தது. தற்போது, அதை முறியடிக்கும் விதமாக புஷ்பா 2 படம் 3 மணி நேரம் 21 நிமிடம் என்று அறிவித்துள்ளது.

ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஒரு சிலர், “அய்யோ அவ்வளவு லென்த்தா… பாத்து இந்தியன் 2 படம் மாதிரி ஆகிராம ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News