வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

புஷ்பா 2 படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம்.. அல்லு அர்ஜுன் சம்பளத்தை கேட்டா தல சுத்துது

Pushpa 2 : புஷ்பா தி ரைஸ் படம் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றிருந்தது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்திருந்தனர். அதிலும் சமந்தா ஓ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடிய நிலையில் அந்த பாடல் ட்ரெண்டானது.

அதோடு பல மொழிகளில் புஷ்பா படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலை வாரி குவித்தது. இந்த சூழலில் புஷ்பா தி ரூல் என்ற இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.

அதோடு புஷ்பா 2 வருகின்ற டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ள நிலையில் இந்தப் படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் சுகுமார் புஷ்பா 2 படத்திற்காக 15 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புஷ்பா 2 படத்தில் பிரபலங்கள் வாங்கிய சம்பளம்

மேலும் பகத் பாசிலுக்கு 8 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு படத்தின் கதாநாயகனான அல்லு அர்ஜூனுக்கு 300 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் தான் இருப்பார்.

ஏனென்றால் இவரை காட்டிலும் விஜய்யின் சம்பளம் குறைவுதான். மேலும் புஷ்பா 2 படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஸ்ரீ லீலா நடனமாடி இருந்தார்.

அதற்காக அவருக்கு இரண்டு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் சமந்தா நடனம் ஆடிய போது அவருக்கு 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் புஷ்பா 2 படத்தில் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளமே பெரிய தொகை செலவாகி இருக்கிறது.

Trending News