புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

மரத்த வெட்டி கடத்துறவன் ஹீரோ.. அத புடிக்க வந்தவன் வில்லன்.. நல்லா இருக்குடா உங்க நியாயம்

மரத்த வெட்டி கடத்துறவன் ஹீரோவம், அதை பிடிக்க வந்த போலீஸ் வில்லனாம். டேய் தெலுங்கு சினிமா என்னடா இது. ஆமா, இன்று மக்களின் மனநிலை மாறிவிட்டது.

தெலுங்கு சினிமா தமிழ் சினிமாவோட புகுந்து தமிழ் மக்களின் மனதை மாற்றி விட்டது. புஷ்பா 2 ஏற்படுத்திய தாக்கம் இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. திருடனை ஹீரோவாக பார்க்கிறார்கள்.

அவனைப் பிடிக்க வந்த காவல்துறையே வில்லனாக பார்க்கிறார்கள். மாற வேண்டியது சினிமா இல்லை மக்கள் தான், ஒரு திருடனை மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் மக்களின் இன்றைய மனநிலை எப்படி இருக்கிறது என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

சினிமா என்றும் அழிவதில்லை அழிக்க வேண்டும் என்றே யாரும் எண்ணுவதில்லை. ஆனால் சினிமாவின் தரம் அழிந்துவிடும் போல.. இன்றைய சந்தர்ப்ப சூழ்நிலைவாதிகளால் சினிமாவின் தரம் குறைந்து விட்டது.

Trending News