புஷ்பா 2 முதல் நாளிலேயே உலகளவில் 294 கோடிக்கு வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டது மைத்திரி மூவி மேக்கர்ஸ். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 165 கோடி வசூல் சாதனை செய்துள்ளது
அல்லு அர்ஜுன்-சுகுமார் கூட்டணி வசூலில் சாதனை படைத்தாலும் விமர்சன ரீதியாக பல குறைகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றன.
இந்திய சினிமா வரலாற்றில் பல சாதனைகளை புஷ்பா 2 முறியடித்து வருகிறது. நாலா பக்கமும் காசு வந்து குவிக்கிறது.
அதாவது பிரபல OTT நிறுவனமான Netflix 275 கோடி கொடுத்து இந்த படத்தை கைப்பற்றியுள்ளது. 450 முதல் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் முழு முதலீடை தற்போதே எடுத்து விட்டனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி 16 அல்லது 25 ஓடிடி-ல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியாக இன்னும் இரண்டே வாரத்தில் மொத்தமாக 1000 கோடி வசூலை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
புஷ்பா 3 வருவதற்கான அறிகுறி ஒன்றை படத்தில் வைத்துள்ளனர், அதற்காகத்தான் கடைசி அரை மணி நேரம் வச்சு செஞ்சது ஆகவும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.