வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

2 பிரம்மாண்ட படங்களின் வசூலை முறியடிக்க போகும் புஷ்பா 2.. அமீர்கானை அல்லு அர்ஜுன் ஓவர்டேக் பண்ணுவாரா?

Allu Arjun Pushpa 2: இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் டிசம்பர் 5ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் புஷ்பா 2 வெளிவந்தது. இப்படம் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு முதல் பாகமாக வெளிவந்த நிலையில் அனைவருடைய கவனத்தையும் பெற்று அதிக வசூலை குவித்தது. அதனால் இதைவிட இன்னும் டபுள் மடங்கு பெயரெடுத்து வசூல் அளவிலும் சாதனை காட்ட வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு விஷயங்களிலும் அதிக மெனக்கெடு எடுத்து இருக்கிறார்கள்.

அதனுடைய வெற்றியாக தான் தற்போது வெளிவந்த புஷ்பா 2 எதிர்பார்க்காத அளவிற்கு 1508 கோடி லாபத்தை பெற்றிருக்கிறது. ஆனால் பட்ஜெட் 400 முதல் 500 கோடி வரை தான், ஆனால் கிடைத்த லாபமோ பெருசு. அதுமட்டுமில்லாமல் தற்போது அல்லு அர்ஜுனவின் மதிப்பும் மார்க்கெட் ரேட்டும் அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம். அதுவும் சும்மா இல்ல கிட்டத்தட்ட நான்கு வருடமாக இப்படி ஒரு வரவேற்பை கொடுப்பதற்காக அல்லு அர்ஜுனா போராடி இருக்கிறார்.

இடையில் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் முழுக்க முழுக்க புஷ்பாவின் இரண்டாம் பாகத்தில் அவரை மெருகேற்றிக் கொடுத்திருக்கிறார். பொதுவாக இரண்டாம் பாகம் என்றாலே ஒன்னு நல்லா இருக்கும், இல்லையென்றால் மொத்தமாக நெகட்டிவ் ஆக பெயர் வாங்கி விடும். அப்படி எத்தனையோ படங்கள் இரண்டாம் பாகங்கள் வந்து சொதப்பிய நிலையில் புஷ்பா 2 அதையெல்லாம் தவிடு பொடியாக்கி விட்டது.

அந்த வகையில் எப்பொழுதும் பார்க்கக்கூடிய படமாகவும் அதிக வசூல் செய்த படமாகவும் இரண்டு படங்கள் தற்போது வரை இந்திய படமாக பெயரெடுத்து இருக்கிறது. அதில் ஒன்று 2016 ஆம் ஆண்டு இயக்குனர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த தங்கல். இப்படம் வெறும் 70 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தாலும் உலகளவில் சுமார் 2500 கோடி வசூலை பெற்று சாதனை படைத்த படமாக இப்பொழுது வரை பெயர் எடுத்து இருக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த பாகுபலி 2 படமும் 250 கோடியில் எடுக்கப்பட்டு 1800 கோடிக்கு மேல் வசூலை அடைந்திருக்கிறது. அந்த வகையில் அதிக வசூலை அடைந்த மூன்றாவது படமாக தற்போது புஷ்பா 2 இடம் பிடித்திருக்கிறது. அதே மாதிரி இன்னும் போகப் போக புஷ்பா 2 அதிக வசூலை பெற்று அமீர் கானை ஓவர் டேக் பண்ணிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் புஷ்பா 2 வெளிவந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில் 1500 கோடி லாபத்தை பெற்றிருக்கிறது என்றால் இன்னும் ஒரு சில வாரங்களில் நிச்சயம் இதைவிட வசூலை அதிகரித்து விடும்.

Trending News