வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சோறு போடுங்க, தலையில் தூக்கி வச்சு கொண்டாடாதீங்க.. மறைமுகமாக தாக்கி பேசிய சத்யராஜ்

தற்போது குணச்சித்திர நடிகராக தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் சத்யராஜ் தைரியமாக சில கருத்துக்களை கூறுவது வழக்கம். அதன் மூலம் பிரச்சனை வருமே என்று அவர் ஒருபோதும் பயந்தது கிடையாது. அந்த வகையில் அவர் தற்போது ரசிகர்களிடம் ஒரு கருத்தை வலியுறுத்தி பேசியுள்ளார். அதாவது தங்களுக்கு பிடித்த நடிகரின் திரைப்படம் வெளியானால் போதும் உடனே ரசிகர்கள் அதை ஆரவாரமாக கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் ரஜினி போன்ற உச்ச அந்தஸ்தில் இருக்கும் நடிகர்களுக்கு வெறித்தனமான ரசிகர்களும் இருக்கின்றனர்.

Also read:சூப்பர் ஸ்டார் குடும்பத்திற்கு வந்த அடுத்த வாரிசு.. யாரு சார் அந்த வணங்காமுடி?

இதைப் பற்றி பேசிய சத்யராஜ் நடிகர்களுக்கு எதுவும் தெரியாது. கேமரா முன்னால் ஆக்சன் என்றால் நடிக்க தான் தெரியும். அதை தவிர வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது. அதனால் எங்களை நீங்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்களால் தான் நாங்கள் பணம் சம்பாதிக்கிறோம். அதனால் எங்களுக்கு சோறு போடுங்கள், ஆனால் எங்களை தலையில் வைத்து கொண்டாட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Also read:ஹீரோ வாய்ப்பு வேண்டாம் என ஒதுங்கிய 6 பழைய காதாநாயகர்கள்.. வாய்ப்பு வந்தும் தெறித்து ஓடிய சத்யராஜ்

அவருடைய இந்த பேச்சு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கி பேசும் படி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் பல வருடங்களுக்கு முன்பே ஒரு முறை சத்யராஜ் இது போன்ற கருத்துக்களை கூறியிருக்கிறார். அப்போது அவருடைய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் அவர் மீண்டும் மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் ரஜினியை குறிப்பிட்டு மறைமுகமாக பேசியிருக்கிறார்.

அவரின் இந்த கருத்துக்கு தற்போது ரசிகர்கள் பல கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். மேலும் இத்தனை வருடமாக நன்றாக சம்பாதித்து காசு பார்த்துவிட்டு இப்போது உங்களுக்கு திடீர் ஞானோதயம் வந்து விட்டதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also read:சத்யராஜ்க்கு இப்படி ஒரு கிளாமர் மகளா? நடிப்பிற்கு கிரீன் சிக்னல் வருமா?

Trending News