வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சிம்பு பட வாய்ப்பை தட்டி தூக்கிய RJ பாலாஜி.. புதுசு புதுசா பிரச்சினையை கிளப்புறாங்க!

சிம்புவின் நடிப்பில் உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவரின் பத்து தல திரைப்படமும் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிம்பு நடிக்க இருந்த ஒரு திரைப்படம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சிம்புவை வைத்து எடுக்கும் முடிவில் இயக்குனர் இருந்தார்.

Also read : தன்னுடைய அடையாளத்தையே மாற்றிக் கொண்ட டி ஆர்-இன் புகைப்படம்.. தோள் கொடுக்கும் சிம்பு!

கொரோனா குமார் என்ற தலைப்பில் உருவாக இருந்த அந்த படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அதன் படப்பிடிப்பு துவங்கப்படாமலே இருந்தது. சிம்பு கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது தயாரிப்பு தரப்பிற்கும் சிம்புவுக்கும் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே சிம்புவின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. அவர் நடிக்கும் படங்களில் அலட்சியம் காட்டுவதாகவும், ஏதாவது ஒரு பிரச்சனை செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.

Also read : ஹாட்ரிக் கொண்டாட்டத்தில் ஆர் ஜே பாலாஜி.. போனி கபூர் என்ன கொடுத்துருக்காரு பாருங்க

ஆனால் அதையெல்லாம் கடந்து தற்போது அவர் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கொரோனா குமார் திரைப்படம் கைவிடப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிம்புவுக்காக இவ்வளவு நாட்கள் காத்திருந்த கோகுல் இந்த முடிவால் தற்போது பயங்கர அப்செட்டில் இருக்கிறாராம்.

அதைத் தொடர்ந்து அவர் தற்போது ஆர் ஜே பாலாஜியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம். தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் ஆர் ஜே பாலாஜியின் நடிப்பில் சமீபத்தில் வீட்ல விசேஷம் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

அந்த பட வெற்றியை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி தற்போது கோகுல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: 30 கிலோ உடல் எடை குறைக்க கண்ணீர்விட்டு கதறிய சிம்பு.. இவ்வளவு ரிஸ்க் எடுத்து இருக்காரா.?

Trending News