வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சிவனாண்டி உடன் பட்டையை கிளப்ப போகும் RJ பாலாஜி.. இவங்க அலப்பறைக்கு இனிமே அளவே இல்ல

ஆரம்பத்தில் ஆர் ஜே பாலாஜி ரேடியோ ஜாக்கியாக வேலை பார்த்தார். தன்னுடைய தனித்துவமான குரலாலும், அடுத்தடுத்த கவுண்டர்களாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தார். அதன் பிறகு சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்தார்.

ரேடியோவில் வேலை பார்க்கும் போது வாய் கிழியப் பேசிய ஆர் ஜே பாலாஜி சினிமாவுக்கு வந்த உடன் அமைதியாக மாறிவிட்டார். அமைதிப்படை படத்தில் அமாவாசையாக இருக்கும்போது பவ்யமாக இருந்த சத்யராஜ் எம்எல்ஏ நாகராஜன் ஆனவுடன் பந்தா காட்டுவார்.

அதேபோல் ஆர் ஜே பாலாஜியும் சினிமாவுக்கு வந்த உடன் பெரிய பந்தா காட்டுவார் என நினைத்த நிலையில் அவர் கேரக்டரை மாற்றிக் கொண்டார். தன் வாயால் கிடைத்த இந்த மிகப்பெரிய வாய்ப்பை நாமே கெடுத்துக்க கூடாது என அமைதியாக உள்ளாரோ என்னவோ.

ஆனால் சினிமாவுக்கு வந்த பிறகு வாயை விட செயலில் பின்னுகிறார். இவர் நடித்த எல்கேஜி படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இதை தொடர்ந்து நயன்தாராவுடன் ஆர் ஜே பாலாஜி நடித்த மூக்குத்தி அம்மன் வேற லெவலில் இருந்தது. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் வெற்றியை குவித்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி.

தற்போது ஆர் ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள வீட்டிலே விஷேசங்க படம் ஏப்ரலில் வெளியாக உள்ளது. இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளார்கள். சத்யராஜ் காமெடியில் பின்னி பெடல் எடுக்க கூடியவர், அவருடன் ஆர் ஜே பாலாஜி இணைந்தால் சொல்லவா வேண்டும்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ் நகைச்சுவைக்கு இணையாக வீட்டுல விசேஷங்க படத்தில் ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ் இருவரின் காம்போ நகைச்சுவையை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்து இருக்கிறார்கள்.

Trending News