புதன்கிழமை, ஜனவரி 8, 2025

வீடு வீடாய் சென்று விளம்பரப்படுத்திய RJ பாலாஜி.. வீட்ல விசேஷம் எப்படி இருக்கு, ட்விட்டர் விமர்சனம்

மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்குப் பிறகு ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கியிருக்கும் வீட்ல விசேஷம் திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது போனிகபூர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க காமெடி கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற பதாய் ஹோ என்ற படத்தின் ரீமேக் ஆகும். ஊர்வசி மற்றும் சத்யராஜின் அட்டகாசமான காமெடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த இந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

veetla-vishesham
veetla-vishesham

அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் காமெடி மற்றும் எமோஷனல் காட்சிகள் சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் சத்யராஜ் இந்த படத்தில் பயங்கரமாக ஸ்கோர் செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

veetla-vishesham
veetla-vishesham

அவருக்கு இணையாக நடித்திருக்கும் ஊர்வசியின் நடிப்பு தற்போது அனைவரின் கைதட்டலையும் பெற்றுள்ளது. எமோஷனல் மற்றும் காமெடி காட்சிகளில் அவருடைய எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸ் சப்போர்ட் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

veetla-vishesham
veetla-vishesham

ஹிந்தியில் இந்தத் திரைப்படம் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்ததோ அதே போன்று தமிழிலும் இப்படம் எந்த சொதப்பலும் இல்லாமல் வெளிவந்துள்ளது பாராட்டும் வகையில் இருக்கிறது. அந்த வகையில் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வரிசையில் இந்த படமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

veetla-vishesham
veetla-vishesham

மேலும் இந்தப் படத்தின் ரிலீசை முன்னிட்டு ஆர் ஜே பாலாஜி சின்னத்திரை, யூடியூப் சேனல் போன்ற பல இடங்களிலும் விளம்பரம் செய்து வந்தார். அதன் பலனாக தற்போது இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Trending News