வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கோடிக்கணக்கில் செலவு செய்யும் தயாரிப்பாளர்.. எல்லாம் ஆர்கே சுரேஷ் மேல் இருக்கிற நம்பிக்கை

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக இருந்து பின்னர் ஹீரோ அவதாரம் எடுத்தவர் தான் நடிகர் ஆர்.கே.சுரேஷ். தற்போது ட்ரீம் லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் இளைய பிரபாகரன் இயக்கத்தில் தயாராகி வரும் கோட்டை முனி என்ற படத்தில் ஆர்.கே.சுரேஷ் நடித்து வருகிறார்.

மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.கடந்த 1980களில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் வாழ்ந்த கோட்டை முனி என்பவரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.

இலங்கை – தனுஷ்கோடி இடையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி வரும் கேங்ஸ்டர் கதையில் தான் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார்.இந்நிலையில் இப்படம் குறித்து பேசிய நடிகர் ஆர்.கே.சுரேஷ், கடலில் நடக்கும் கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகும் படம்

இப்படத்திற்காக கடலுக்கு அடியில் நடக்கும் சண்டைக்காட்சி ஒன்றிற்கு மட்டும் சுமார் 2 கோடி ரூபாய் செலவில் செட் அமைத்துள்ளோம்.ஸ்டண்ட் மாஸ்டர் டைகர் ஜான் மார்க்குடன் இணைந்து இராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டில் கிட்டத்தட்ட 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது என கூறியுள்ளார்.

ஒரே ஒரு சண்டை காட்சிக்கு மட்டும் 2 கோடி ரூபாய் செலவில் செட் அமைத்துள்ள நிலையில், படத்தின் பட்ஜெட்டும் அதிகமாக உள்ளதாம். ஆர்.கே.சுரேஷ் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட படம் இதுதான் என கூறப்படுகிறது.

ஆர்.கே.சுரேஷ் தற்போது நடிகர் கார்த்தியின் விருமன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், காடுவெட்டி என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஒரு சில படங்கள் இன்னும் வெளியாகாமல் உள்ளன.

Trending News