ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

வேறு வழி இல்லாமல் சரத்குமார் நடித்த படம்.. கடைசியில் பிளாப் ஆனது தான் மிச்சம்

Actor Sarathkumar: ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் படங்கள் அப்போது ஓடிய நிலையில் சரத்குமாருக்கு என்று தனி ரசிகர்கள் இருந்தனர். பெரும்பாலும் சரத்குமார் ஆக்சன் படங்களில் தான் நடித்து வந்தார். மேலும் சரத்குமார் குடும்ப செண்டிமெண்ட் படங்களில் நடித்தும் வெற்றி கொடுத்திருக்கிறார். அந்த வகையில் சூரியவம்சம் படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது.

சரத்குமாரே ஒரு படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறார். அதன் பிறகு தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டதால் வேறு வழியில்லாமல் நடித்துக் கொடுத்தார். மேலும் அவர் நினைத்தது போலவே அந்த படம் வெளியாகி தோல்வியை தான் அடைந்து உள்ளதாம்.

Also Read : போர் தொழிலுக்கு பிறகு வேட்டையாடத் தொடங்கிய சரத்குமார்.. நடுங்க வைக்கும் பரம்பொருள் ட்ரெய்லர்

இதற்குக் காரணம் முழுக்க முழுக்க இயக்குனர் என்று கூறப்படுகிறது. அப்போது உள்ள காலகட்டத்தில் பெரிய நடிகர்களின் கால்ஷீட் தான் முக்கியம். ஜூனியர் ஆர்டிஸ்ட் பெரிய நடிகர்களுக்காக காத்திருப்பது சர்வ சாதாரணம் தான். ஆனால் ஒரு படத்திற்காக சரத்குமார் பல மணி நேரம் காத்துக் கொண்டிருந்தாராம்.

அந்தப் படம் தான் விண்ணுக்கும் மண்ணுக்கும். விக்ரம், தேவயானி, குஷ்பூ மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். சரத்குமார் நெடுநேரம் காத்திருந்த நிலையில் இயக்குனர் எங்கே என்று பார்த்தால் தேவயானியை மட்டும் ஒரு மலைப்பகுதியில் வைத்து படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தாராம்.

Also Read : 30 வருடத்திற்கு பிறகு வெளிவரும் இரண்டாம் பாகம்.. சரத்குமார் நிராகரித்து இன்று வரை ஏங்கும் சூப்பர் ஹிட் மூவி

அவர் வேறு யாருமில்லை தேவயானியின் கணவர் இயக்குனர் ராஜகுமாரன் தான். அப்போது இருவரும் காதலித்துக் கொண்டிருந்த சமயம் என்பதால் தேவயானி மட்டும் தனியாக வைத்து காட்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார். இதனால் கடுப்பான சரத்குமார் இந்த படமே வேண்டாம் என்று போய்விட்டாராம். அதன் பிறகு குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சரத்குமாரை கேட்டுக் கொண்டதால் படத்தில் நடிக்க வந்தார்.

வேறு வழியில்லாமல் சரத்குமாரும் நடித்துக் கொடுத்த நிலையில் படம் வெளியாகி தோல்வி அடைந்தது. மேலும் அதன் பிறகு தான் தேவயானி, ராஜகுமாரன் காதல் விவகாரம் வெளியில் கசிந்தது. தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு உடன் இருந்த நிலையில் ஓடி போய் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனாலும் இப்போதும் இந்த தம்மதிகள் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

Also Read : தன்னோட வயசுக்கு ஏத்த மாதிரி வாய்ப்பை தேடி நடிக்கும் 6 நடிகர்கள்.. ஒரே வெற்றியால் 8 படத்திற்கு புக் ஆன சரத்குமார்

Trending News