ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சத்தமில்லாமல் உருவாகிவரும் ராஜன் வகையறா.. கேப்பில் கிடா வெட்டும் வெற்றிமாறன்

வெற்றிமாறன், சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தைதான் எடுத்துக் கொண்டிருக்கிறார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இடையில் சத்தமில்லாமல் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பும் சென்று கொண்டிருக்கிறது.

வெற்றிமாறன் தற்போது தமிழ் சினிமாவில் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய், சூர்யா, அஜித் என பலரும் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர்.

ஆனால் அவரோ கதைக்கு ஏற்ற ஹீரோவை வைத்துதான் படம் எடுப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதுதான் அவரின் வெற்றியும் கூட. வெற்றிமாறனின் சினிமா கேரியரில் வடசென்னை படத்திற்கு ஒரு தனி இடமுண்டு.

வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என பல வருடங்களாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது இப்போதைக்கு நடக்குமா? என்பது சந்தேகம் தான்.

ஆனால் அந்த படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் ராஜனாகவே வாழ்ந்த அமீரின் வாழ்க்கை வரலாறு ராஜன் வகையறா என்ற பெயரில் எடுத்து வருகிறாராம் வெற்றிமாறன். இதில் அமீரின் சிறுவயது காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

அதில் தன்னுடைய அசுரன் படத்தில் தனுஷின் மகனாக நடித்து பெயர் பெற்ற கேன் கருணாஸ் என்ற பையனை நடிக்க வைத்து வருகிறாராம் வெற்றிமாறன். இது படமாக இல்லாமல் வெப் சீரிஸாக உருவாகிக் கொண்டிருக்கிறது. வட சென்னை 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க இது பெரிய அளவில் கைகொடுக்கும் என வெற்றிமாறன் இந்த முயற்சியை எடுத்து வருகிறார். இதனால் ஒரே நேரத்தில் விடுதலை மற்றும் ராஜன் வகையறா ஆகியவற்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.

raajan-vetrimaaran-cinemapettai
raajan-vetrimaaran-cinemapettai

Trending News