வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரட்சிதா காதலை பிரிக்க மனமில்லாத பிக் பாஸ்.. இந்த வாரம் வெளியேற போகும் டம்மி போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரசிகர்களிடம் குறைந்த வாக்கு பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் விஜே மகேஸ்வரி வெளியேறினார்.

இந்நிலையில் கடந்த வாரங்களை விட இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றது. பிக் பாஸ் வீடு ஒரு அரசரின் அரண்மனை போல் காட்சி அளித்தது. எல்லோருமே இந்த வாரம் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடித்து அசத்தி இருந்தனர்.

Also Read : ராபர்ட் மாஸ்டரை நம்ப வச்சு கழுத்தறுத்த ரட்சிதா.. டம்மி பீஸா ஆக்கிட்டீங்களே என கதறல்

இந்த வாரம் 8 போட்டியாளர்கள் நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள். அதாவது அசீம், ஜனனி, கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, நிவாஷினி, குயின்ஸி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் ரட்சிதாவின் காதலை பிரிக்க மனம் இல்லாத பிக் பாஸ் ராபர்ட் மாஸ்டரை காப்பாற்றி உள்ளனர். அதாவது இந்த வாரம் நாமினேஷனில் இருந்து ராபர்ட் மாஸ்டர் காப்பாற்றப்பட்டுள்ளார். இதற்கு பதிலாக டம்மி போட்டியாளர் ஒருவர் வெளியேறப் போகிறார்.

Also Read : டிஆர்பிக்காக நயன்தாராவை வம்பிழுக்கும் விஜய் டிவி.. இதே வேலையா தான் இருப்பாங்களோ!

அதாவது பிக் பாஸ் வீட்டில் டாஸ்க் மற்றும் வேலை என இரண்டிலுமே ஆர்வம் இல்லாத இரண்டு நபர்கள் ராம் மற்றும் நிவாஷினி. இதில் ராம் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறவில்லை. ஆகையால் நிவாஷினி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

அசல் இருந்த வரை அவருடனே சுற்றித்திரிந்த நிவா அவர் போன பின்பு மிகுந்த மன வருத்தத்தில் காணப்பட்டார். இப்போதுதான் மற்ற போட்டியாளர்களிடம் கொஞ்சம் சகஜமாக பழக வந்த நிலையில் எலிமினேட் ஆகியுள்ளார். இதற்கான அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை கமல் அறிவிப்பார்.

Also Read : ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டரை தொடர்ந்து பிக்பாஸில் மலர்ந்த அடுத்த காதல்.. நிராகரித்த கதிரவன்

Trending News