செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய் டிவியை விட்டு வெளியேறும் சரவணன் மீனாட்சி ரச்சிதா.. காரணம் கேட்டு ஆனந்த கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒருமுறை வந்துவிட்டால் வேர்ல்டு ஃபேமஸ் ஆகிவிடலாம். விஜய் டிவியில் தொகுப்பாளர் முதல் சீரியல் நடிகர் வரை அனைவருமே படங்களில் வாய்ப்பு கிடைத்து தற்போது நல்ல நிலைமையில் உள்ளனர். உதாரணமாக நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம் தற்போது புகழ், சிவாங்கி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

தற்போது இந்த வரிசையில் நடிகை ரச்சிதாவும் இணைய உள்ளார். விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் இதற்கு முன்னதாகவே சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியல் மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இத்தொடரிலிருந்து நடிகை ரச்சிதா விலக உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ஒரு கன்னட படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இதன் காரணமாகவே வீடுகளில் இருந்து விலக உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

ரச்சிதா நாயகியாக நடிக்கும் படத்தின் இயக்குனர் குருபிரசாத் அப்படத்தை இயக்கி அவரே நாயகனாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முக்கிய திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில் சீரியலில் இருந்து ரச்சிதா விலகுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்து ரச்சிதா இதுவரை எந்த விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலுக்கு அதிக பார்வையாளர்கள் கிடைக்க ரச்சிதாவும் ஒரு காரணமாக இருந்து வரும் நிலையில், அவரது ரோலில் வேறு யார் நடித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என சில ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சீரியலில் இருந்து ரச்சிதா விலகுகிறாரா இல்லையா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் ரட்சிதா புல்லட் விடும் வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பைக் ரைடர் போல உடையணிந்திருக்கும் அவர் ராயல் என்பீல்டு மீடியர் வகை வண்டியை ஸ்டைலாக ஓட்டிச் செல்கிறார். அவரது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Trending News