ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

போலீசிடம் புகார் கொடுத்த சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா.. வெளிப்படையாக கூறிய காரணம்.

வடிவேலு முரளி நடிப்பில் குழந்தைகள் குடும்பங்கள் கொண்டாட்டத்தோடு ஓடிய படம் “சுந்தரா டிராவல்ஸ்”. ஒரு பழைய பேருந்து இரு நாயகர்கள் இவர்களுக்கு உதவும் இருவர் காவல்துறை அதிகாரியாக ‘விணுச்சக்ரவர்த்தி’ மந்திரி மகளாக ‘ராதா’ மந்திரியாக ‘பி.வாசு’ என படத்தின் அங்கங்களை செதுக்கி இருப்பார் இயக்குனர்.

ஆரம்பத்திலிருந்து படத்தின் இறுதி நிமிடம் வரை அரங்கம் முழுக்க சிரிப்பு சப்தத்தில் நிறைத்திருப்பார். இப்படியான ஒரு புகழ்பெற்ற படத்தில் நடித்த பிறகு ராதா தமிழில் சில படங்களே நடித்தார்.

பிறகு குடும்ப வாழ்வில் அடைக்கலமான ராதா ஒரு குழந்தைக்கும் தாயானார். பிறகு முதல் கணவரோடு இருந்த சில கருத்து வேறபோடுகளால் பிரிந்து வாழ்ந்தவருக்கு எண்ணூர் காவல் ஆய்வாளர் வசந்த ராஜனுடன் தொடர்பு ஏற்பட்டு அது காதலாக மாறியது.

radha
radha

காதலித்த வசந்த ராஜனுக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் இருந்தும் இரண்டாவதாக ராதா திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு காவர் நிலையத்தில் புகார் அளித்த ராதா சில காரணங்களுக்காக கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார்.

இப்போது மீண்டும் புகார் அளித்துள்ளார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராதா சில காரணங்களுக்காக ஏற்கனவே புகார் கொடுத்திருந்தேன் பிறகு காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் இளம்பரிதி எங்கள இருவரையும் வைத்து பேசி சமாதனம் செய்து வைத்தார்.

ஆனால் வீட்டிற்கு வந்த வசந்த ராஜனோ அவர்கள் இருவரும் எனது ஆட்கள் என்றும் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்றும் கூறினார். மேலும் 500 ரூபாயில் சிறார்களிடம் சொல்லி உன்னை கழுத்தறுத்து கொலை செய்துவிட முடியும் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து வாபஸ் பெற்ற புகாரை இப்போது மீண்டும் பதிந்த ராதா வசந்தராஜன் மட்டுமல்லாது பாரதி மற்றும் இளம்பரிதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க பேசியிருக்கிறார்.

காமெடி படத்தில் பார்த்தவர் கண்ணீர் மல்க நிற்பதை பார்த்தால் மனது எத்தனை பாதிப்படைந்திருக்குமோ.

Trending News