சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மேடையில் ஓவர் அலப்பறை செய்யும் ராதாரவி.. மக்களே மறந்த நடிகருக்கு இவ்வளவு பில்டப் தேவையா!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக இருக்கும் ராதாரவி தற்போது வில்லன், குணச்சித்திரம் போன்ற அனைத்து கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத இவர் சில பட விழாக்களின் மூலம் ஏதாவது ஒரு கருத்தை கூறி அடிக்கடி பிரச்சனையில் சிக்குவார்.

அந்த வகையில் தற்போது இவர் 80 காலகட்டத்தில் ஹீரோவாக கலக்கிய ஒரு நடிகரை பற்றி தாறுமாறாக புகழ்ந்து பேசி இருக்கிறார். ஒரு காலத்தில் முன்னணி நடிகராக புகழின் உச்சியில் இருந்த நடிகர் ராமராஜன் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார்.

Also read: ராமராஜன் ரீ என்ட்ரி படத்திற்கு வந்த ஆபத்து.. சாமானியன் என்ற டைட்டிலில் நடந்த துரோகம்!

மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்த இவரை இப்போது மக்கள் கிட்டதட்ட மறந்தே போய்விட்டனர். இந்நிலையில் ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ளார். இதனால் அவருக்கு பலத்த வரவேற்பும், வாழ்த்துக்களும் கிடைத்து வருகிறது.

சமீபத்தில் நடிகர் ராமராஜன் நடிக்கும் சாமானியன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தில் ராமராஜனுடன் இணைந்து ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர். அப்போது மேடையில் பேசிய ராதாரவி ராமராஜனை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசினார்.

Also read: ஜோசியம் பார்த்து கணித்த ராமராஜன்.. அன்றே தெரிந்து கொண்ட நளினி

ராமராஜனின் ரீ என்ட்ரியை பார்த்து பல நடிகர்களும் பயந்துவிட்டார்கள் என்று அவர் ஓவர் அலப்பறை கொடுத்து பேசினார். ராமராஜன் மீண்டும் நடிக்க வந்தது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த அளவுக்கு பில்டப் கொடுப்பது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஏனென்றால் ராதாரவி இந்தப் படம் அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்றெல்லாம் கூவிக்கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் கமலுக்கே டப் கொடுக்கும் வகையில் ராமராஜனின் நடிப்பு இருக்கும் என்றெல்லாம் பேசி பார்ப்பவர்களை கடுப்பேற்றினார். இதைத்தான் ரசிகர்கள் தற்போது கிண்டல் அடித்து வருகின்றனர்.

Also read: நடிகையை கதற விட்ட இயக்குனர் பாலா.. சினிமாவே வேண்டாம் என தலைதெறிக்க ஓட்டம்

Trending News