வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ராதிகாவுக்கும் வரலட்சுமிக்கும் இருந்த மனஸ்தாபம்.. உண்மையை போட்டு உடைத்த சரத்குமார்

Sarathkumar : சரத்குமாரின் முதல் மனைவியான சாயாதேவிக்கு பிறந்தவர்கள் தான் வரலட்சுமி மற்றும் பூஜா. இந்நிலையில் வரலட்சுமி படங்களில் கதாநாயகியாக நடித்த நிலையில் வில்லி கதாபாத்திரங்களில் மிரட்டி வந்தார். இப்போது அவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சரத்குமார் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகனும் உள்ளார். ராதிகா மற்றும் வரலட்சுமி இடையே இருந்த கருத்து வேறுபாடை சரத்குமார் சமீபத்தில் கூறியிருக்கிறார்.

தனது முதல் மனைவி சாயாதேவியை பற்றி பேசி இருந்தார். அதாவது நாங்கள் பிரிய வேண்டும் என்பதற்கு சில காரணம் எங்களுக்குள் இருந்ததாகவும், விவாகரத்திற்கு பின்பும் எங்களது குடும்ப நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். வரலட்சுமி இடமும் என்னை வந்து சந்திக்கக் கூடாது என்று எந்த கட்டுப்பாடையும் அவர் விதிக்கவில்லை என்று சரத்குமார் பேசியிருந்தார்.

Also Read : செகண்ட் இன்னிங்ஸில் தவறவிட்ட 5, 80ஸ் ஹீரோக்கள்.. கொடி கட்டி பறக்கும் சரத்குமார்

மேலும் ஆரம்பத்தில் ராதிகா மற்றும் வரலட்சுமி இடையே மனஸ்தாபம் இருந்தது உண்மைதான். அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து கொண்டு தான் இருந்தது. அதன்பிறகு இருவரும் ஒருவருக்கொருவரை புரிந்து கொண்டு அவர்களுக்குள் ஒரு சுமூக உறவு இருக்கிறது.

வரலட்சுமி இப்போது மிகவும் வலுவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை நினைத்து பெருமிதம் கொள்வதாக சரத்குமார் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதோடு சரத்குமாரும் இப்போது ரீ என்ட்ரியில் பட்டையை கிளப்பி வருகிறார்.

Also Read : இலங்கையில் பல கோடி சொத்து.. ராதிகாவின் 2வது திருமணத்தில் இருக்கும் மர்மம்

Trending News